அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொழில் வளர்ச்சியில் அரசு கவனம் : அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

Added : செப் 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோவை:''சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை மறுமலர்ச்சி பெறச் செய்வதில், அரசு கவனம் செலுத்தி வருகிறது,'' என, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.கோவையில், தமிழ்நாடு முதலீட்டுக்கழகம், இந்திய தொழில்கள் கூட்டமைப்பு இணைந்து, 'எதிர்காலத்திற்கு தயாராகும் தொழில்கள்' என்ற கருத்தரங்கை கோவையில் நடத்தின. அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:கொரோனா தொற்றால்
 தொழில் வளர்ச்சியில் அரசு கவனம்  : அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

கோவை:''சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை மறுமலர்ச்சி பெறச் செய்வதில், அரசு கவனம் செலுத்தி வருகிறது,'' என, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

கோவையில், தமிழ்நாடு முதலீட்டுக்கழகம், இந்திய தொழில்கள் கூட்டமைப்பு இணைந்து, 'எதிர்காலத்திற்கு தயாராகும் தொழில்கள்' என்ற கருத்தரங்கை கோவையில் நடத்தின. அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மறுமலர்ச்சி பெறச் செய்ய வேண்டும்.

தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. மாநில அரசு ஏற்றுமதி கொள்கை வெளியிட உள்ளது. நீண்ட கால கோரிக்கைகள், தேவைகளை அடிப்படியாகக் கொண்டு இந்த கொள்கை இருக்கும்.கோவையை, தொழில்களின் மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேச தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkeeran - Hosur,இந்தியா
22-செப்-202111:42:05 IST Report Abuse
Nakkeeran இப்போதைக்கு தமிழகத்தில் உச்சத்தில் இருக்கும் தொழில் மணல் கடத்தல் , போதை பொருள் கடத்தல் ( நேற்று கூட தமிழகத்தில் ஹெராயின் கடத்தல் சம்பந்தமாக ஆந்திரா தம்பதியர் கைது மதிப்பு 21000 கோடி என்று கூறப்படுகிறது )
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
22-செப்-202110:29:36 IST Report Abuse
vbs manian தொழில் வளர்ச்சியில் கவனம் .ஆச்சர்யம் .ஸ்டெர்லிட் மூடிவிட்டது. போர்ட் மூட போகிறது. தமிழ் நாட்டுக்கு வரவிருந்த கிட்டெக்ஸ் ரெடி மேட் ஆடை நிறுவனம் தெலங்கானாவுக்கு போய் விட்டது. அங்கு நாலாயிரம் கோடி முதலீட்டில் வாரங்கல் என்ற இடத்தில் தொழிற்சாலை கட்டப்படுகிறது. பினராயி விஜயன் அரசு கொடுக்கும் குடைச்சல் தாங்க முடியாமல் மலபார் குழுமம் மருந்து கம்பெனிகள் பல கேரளாவிலிருந்து தெலங்கானாவுக்கு இடம் பெயர்கின்றன.பக்கத்தில் உள்ள தமிழ் நாட்டுக்கு ஏன் வரவில்லை. சிந்தியுங்கள் நண்பர்களே. எல்லோருக்கும் தெரிந்து விட்டது தமிழ் நாட்டில் புல் பூண்டு கூட முளைக்காது என்று. முதலீட்டார்கள் தமிழகம் வர பயப்படுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X