தமிழ்நாடு

நடைப்பயிற்சி சென்ற முதல்வரிடம் பெண்கள் கலந்துரையாடல்

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
சென்னை : நடைப்பயிற்சி சென்ற முதல்வர் ஸ்டாலினிடம், நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் உரையாடும் வீடியோ, நேற்று (செப்.21) சமூக வலைதளங்களில் வெளியானது.முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிப்பவர். சமீபத்தில் அவர், சாதனங்கள் உதவியுடன், உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.நேற்று முதல்வர் ஸ்டாலின், சென்னை தியோசபிக்கல்
நடைப்பயிற்சி சென்ற முதல்வரிடம் பெண்கள் கலந்துரையாடல்

சென்னை : நடைப்பயிற்சி சென்ற முதல்வர் ஸ்டாலினிடம், நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் உரையாடும் வீடியோ, நேற்று (செப்.21) சமூக வலைதளங்களில் வெளியானது.முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிப்பவர். சமீபத்தில் அவர், சாதனங்கள் உதவியுடன், உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.நேற்று முதல்வர் ஸ்டாலின், சென்னை தியோசபிக்கல் சொசைட்டி வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் சுப்பிரமணியன் சென்றார்.


மகிழ்ச்சி



அங்கு நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள், முதல்வரை வழிமறித்து உரையாடினர். அவரும் இயல்பாக அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். பெண் ஒருவர் முதல்வரிடம் பேசுகையில், ''இரண்டு ஆண்டுகளுக்கு முன் விமான நிலையத்தில், உங்களை சந்தித்தேன். அப்போது, 'செல்பி' எடுத்தேன்.
அப்போது, நீங்கள் கட்டாயம் ஆட்சிக்கு வந்தாக வேண்டும் என்று கூறினேன். அதேபோல் ஆட்சிக்கு வந்தது ரொம்ப மகிழ்ச்சி. ''ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்றீங்க... உங்கள் ஆட்சி சிறப்பாக உள்ளது. திட்டங்களை சிறப்பாகக் கொண்டு வருகிறீர்கள். உங்கள் ஆட்சி அப்படியே தொடர வேண்டும். நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்,'' என்றார்.
மேலும், அவர் கடைசியாக ஒன்று கேட்கிறேன் சார், 'எப்படி இப்படி மார்கண்டேயனாகவே இருக்கிறீர்கள்' என்று கேட்க, அங்கு சிரிப்பலை எழுந்தது. அதற்கு பதில் அளித்த முதல்வர், 'நான் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன்' என்றார்.


latest tamil news



வாழ்த்து



அதன்பின், 'கால்பந்து விளையாட்டிற்காக, ஸ்பெயின் சென்றுள்ள உங்கள் பேரன் வெற்றியுடன் திரும்ப வேண்டும்' என்று முதல்வரிடம், அப்பெண் வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bairav Kumar - Chennai,சிங்கப்பூர்
26-செப்-202118:26:28 IST Report Abuse
Bairav Kumar மணிப்பூர் கவர்னராக இருக்கும் இல கணேசன், RSS காரர் என்று சொல்லிக்கொண்டாலும், தீவிர திமுக விசுவாசி, கருணாநிதிக்கு மிக நெருக்கம், தமிழகத்தில் பிஜேபி யை வளர்பதைவிட திமுகவுக்கு ஆதரவாகத்தான் இருந்துள்ளார். கணேசன் கவர்னர் ஆனவுடன் திமுகவுக்கு காண்பித்த முதல் விசுவாசம் ஸ்டாலின் பேரனை மணிப்பூர் கால்பந்து குழுவில் இடம் பெற வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பியது. இது எத்தனை பேருக்கு தெரியும்.
Rate this:
Cancel
vigneshh - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
22-செப்-202113:12:50 IST Report Abuse
vigneshh இதெல்லாம் ஒரு செட் அப் தான்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
22-செப்-202111:02:33 IST Report Abuse
duruvasar இதுமாதிரி விளம்பரங்கள் வந்துகிட்டே இருக்கும். நடிகர் விவேக் இந்த மாதிரி முதல் நாளிலிருந்து கடைசி நாள்வரை செய்து கொண்டிருந்தார் என்ற செய்தி அவர் மறைவுக்கு பின்தான் பேசப்பட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X