கோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம் கட்டத்தடை : உச்சநீதிமன்றம் உத்தரவு

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: கோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட உயர்நீதிமன்றம் அளித்திருந்த அனுமதிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, வீரசோழபுரம் பகுதியில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட தடை விதிக்க
 கோயில் நிலத்தில் கலெக்டர் அலுலகம் கட்டத்தடை : உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி: கோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட உயர்நீதிமன்றம் அளித்திருந்த அனுமதிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, வீரசோழபுரம் பகுதியில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட தடை விதிக்க கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.


latest tamil news



மேலும் அனுமதியின்றி கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக கூறி, அவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

பொதுநல நோக்கம் என்பதால் கோயில் இடத்தில் கலெக்டர் அலுவலகம் கட்டலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதையடுத்து ரங்கராஜன் நரசிம்மன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.அப்துல்நசீர் மற்றும் கிருஷ்முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri - Ghisin,கோஸ்டாரிகா
22-செப்-202116:29:02 IST Report Abuse
Sri பொது நலம் என்றால் நாட்டு நலன் அதானி துறைமுகம் ஸ்டெர்லைட் நியூட்ரினொ.. மற்றும் ஏண்ணற்ற அந்நிய செலவாணி ஈட்டும் திட்டங்கள் கோர்ட் தமிழக அரசு முட்டுக்கட்டை பட்டுள்ளது..ஏன் இந்து கோவில் நிலங்கள் இப்படி கபளீகரம் செய்யப்படுகிறது..லயலொ கல்லுரி சிவன் கோவிலுக்கு திருப்பி கொடுக்க வேண்டூம்
Rate this:
Cancel
22-செப்-202112:22:14 IST Report Abuse
Venkat Sadagopan அன்பே உருவான எம் கடவுள் எட்டி உதைத்தாலும் பொருத்துக் கொள்வார். அதனால் ஏமாளி ஆவாரோ?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
22-செப்-202110:57:58 IST Report Abuse
duruvasar இவனுங்க கோவில் நிலம் இருக்கிற இடத்திலெல்லாம் ஒரு மாவட்டத்தை துவங்குவாங்களாட்டம் இருக்கு. பேசாம பிராண்ட் பேண்ட் கம்பெனிகள் போல் தெருக்களில் குடையை விரித்து விரித்து அலுவலகம் வச்சிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X