எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தமிழர்களின் ஆதி இசை பறையிசையே: அடித்து சொல்கிறார் ஆய்வாளர் ஜெயகுமார்

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை : ''நம் மூத்த தமிழ் குடிகளின் பொக்கிஷம், உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம் என்ற பாரம்பரியத்தையும், பழமையையும் தன்னகத்தே கொண்டது, 'பறை' இசைக்கருவி .''இதுவே, தமிழர்களின் ஆதி இசை;இதில் இருந்து பிறந்தது தான், பிற இசைக்கருவிகள்,'' என்கிறார் பறையிசை ஆய்வாளர் ஜெயகுமார்.திருவண்ணாமலை மாவட்டம் கேட்டவரம்பாளையத்தைச் சேர்ந்தவர், ஜெயகுமார். பறை இசைக் கலைஞரான இவர்,
தமிழர்களின் ஆதி இசை பறையிசையே: அடித்து சொல்கிறார் ஆய்வாளர் ஜெயகுமார்

சென்னை : ''நம் மூத்த தமிழ் குடிகளின் பொக்கிஷம், உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம் என்ற பாரம்பரியத்தையும், பழமையையும் தன்னகத்தே கொண்டது, 'பறை' இசைக்கருவி .''இதுவே, தமிழர்களின் ஆதி இசை;இதில் இருந்து பிறந்தது தான், பிற இசைக்கருவிகள்,'' என்கிறார் பறையிசை ஆய்வாளர் ஜெயகுமார்.

திருவண்ணாமலை மாவட்டம் கேட்டவரம்பாளையத்தைச் சேர்ந்தவர், ஜெயகுமார். பறை இசைக் கலைஞரான இவர், தற்போது, சென்னையில் வசிக்கிறார்.


ஆராய்ச்சி

கடந்த, 26 ஆண்டுகளில், ஆயிரத்திற்கும் அதிகமான மேடைகளில், பறை இசையை தனி இசையாக வழங்கியவர். இந்த இசையை இசைப்பவர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருப்பர் என்ற பொதுவான கருத்தை உடைப்பதற்காகவே, இவர் பட்டங்கள் பல வாங்கி குவித்துள்ளார். இயற்பியலில், இளநிலை, சைக்காலஜியில் முதுநிலை, கல்வியிலில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர் பட்டங்களை பெற்றுள்ளார் ஜெயகுமார். 'பேசு' எனும் 'பியூப்பிள் எஜுகேஷன் பார் சோஷியல் யூனிட்டி' என்ற அமைப்பின் நிறுவனராக இருந்து, பறையிசையை கற்றுத் தருகிறார்; இது குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

பாட்டன் பூட்டன் காலத்து பறை இசை, இவரது ரத்தத்தோடு கலந்திருக்கிறது. இன்றைக்கும் இந்த இசையைத் தவிர வேறு எதுவுமே தெரியாமல் வாழும் உறவுகளை கொண்டிருப்பவர். பறை இசை குறித்து இவர் வாசித்தும், வாசிக்க கேட்டும் உணர்ந்ததைவிட, ஆராய்ந்து அறிந்தது அதிகம்.

பறை இசையின் பெருமை குறித்து, ஜெயகுமார் கூறியதாவது : 'கன்னி பறை, கொட்டு பறை, சட்டி பறை, பலகை பறை, கண்டிகை பறை' என, நுாற்றுக்கும் மேலான பறை இசைக்கருவிகள் இருந்துள்ளன.இது, பஞ்ச பூதங்களையும் தன்னகத்தே கொண்ட தன்னிகரற்ற இசைக்கருவி. ஐந்திணை நிலத்தின் அடையாளமாகவும், அம் மக்களின் இசைக் கருவியாகவும் பறை இசையே இருந்துள்ளது. குறிஞ்சியில், தொண்டகச் சிறுபறை, முல்லையில் ஏறுகோட்பறை, மருதத்தில் தண்ணும்மை, நெய்தலில் மீன் கோட்பறை, பாலையில் ஆறெறி பறை என்ற பறையின் பெருமை குறிக்கப்பட்டுள்ளது.போரில் அடைந்த வெற்றியை, பறையால் சாற்றியதை, 'இசைப் பறையொடு வென்றி நுவல...' என, புறநானுாறு கூறுகிறது.


வெளிச்சம்

திட்டைப் பறை, தொண்டகச் சிறுபறை, தொண்டகப் பறை, அரிப்பறை, மண்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர் பறை, ஆடுகளப் பறை என, சங்க இலக்கியங்களில் பல்வேறு பெயர்களில் 'பறை' குறிப்பிடப்படுகிறது.உலகப் பொதுமறையாம் திருக்குறளில் 'அறைபறை யன்னர் கயவர்...' என்றும், 'எம்போல் அறைபறை கண்ணாரகத்து...' என்றும், 'அறைபறை நின்று மோதிட...' என்றும் பறை ஓங்கி ஒலிக்கிறது. அரசர் காலத்தில் அறிவிப்புகளை பறை அடித்து, மக்களுக்கு சொல்வது வழக்கமாக இருந்தது.பெருகி வரும் தண்ணீரை அடைக்க; உழவர் மக்களை அழைக்க; போருக்கு எழுமாறு வீரர்களை அழைக்க; உழவு செய்வோருக்கு ஊக்கம்அளிக்க; விதை விதைக்க.அறுவடை செய்ய; விலங்குகளை விரட்ட; நாட்டின் செய்தியை மக்களுக்கு தெரிவிக்க; இயற்கையை வழிபட; விழாக்கள் நடத்த என, அரசர்களை மட்டுமல்ல மக்களின் மனதையும் பறை ஆண்டே வந்திருக்கிறது.

பறையின் பல முகங்களில் ஒரு முகம் தான் முரசு; அந்த முரசு மூலம் செய்தி அறிவிக்கும் முரசு மண்டபம் இருந்துள்ளதை, இப்போது தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும்போது, சில இடங்களில் காணலாம்.மனிதனின் பிறப்பில் இருந்து இறப்பு வரை, பறை இசை கலந்திருக்கிறது.

ஆனால் காலப்போக்கில், அனைத்தும் மறைந்து போய் இறப்பில் மட்டும் வாசிக்கப்படும் இசைக்கருவியாக பறை அறியப்பட்டது, மிகப்பெரிய சோகம். இப்பறையின் மூலம் வளர்ச்சி பெற்ற பிற தாள இசைக் கருவிகளின் வளர்ச்சியில் வேரான பறை இசை, வெளியே தெரியாமல் போனது. வயிறு பசித்தவன் மட்டுமே இந்த இசையை வாசித்தால், வறுமையைப் பார்த்த மக்களுக்கு இசையின் வளமையை உணர முடியாமல் போனது.இப்படி இந்த பறை இசை பற்றி, படித்து, கேட்டு, வாசித்து பெற்ற அனுபவங்களின் அடிப்படையில், புதுமையான முறையில் இந்த பழமையான இசையை 'பேசு' அமைப்பின் மூலமாக வழங்கி வருகிறேன்.

என் மேடையில், இந்த பறை இசை மூன்று மணி நேரத்திற்கும் மேல் இசைக்கப்படுவதை கேட்ட பலர், பறையில் இவ்வளவு ரகங்களா; இவ்வளவு சுவாரஸ்யங்களா? என, வியந்து போகின்றனர். மார்கழி மக்கள் இசை விழா நடத்தி, அதன் மூலம் பறை இசையை பல ஆயிரம் பேரிடம் கொண்டு போய்ச் சேர்த்துள்ளேன். திரைத்துறையினரின் உதவியோடு, பறை இசை புதிய பரிணாமம் பெற்று வருகிறது.என் பறை இசைக்குழு, பல நாடுகளுக்கு சென்றுள்ளது இப்போது, ஓ.டி.டி., போன்ற வலைதளங்களில் பறை இசைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, புது வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது.


உறுதி


ஜாதி மதங்களை கடந்து, என்னிடம் நேரடியாகவும், 'ஆன்லைன்' மூலமாகவும் பறை இசையைக் கற்க, இப்போது நிறைய பேர் வருகின்றனர். இசை கற்றவர்கள், திருமணம் உள்ளிட்ட எல்லா விழாக்களிலும் இசைத்து, புகழும், பொருளும் பெற்று வருகின்றனர்

.இந்த இசையை கற்றுக் கொண்டால், எந்த இசையும் உங்களுக்கு வசமாகும். பேசுவதை இசைக்கவல்ல தாளக்கருவி பறையே; இந்தக் கருவி ஒன்றைத் தான் இசைப்பவரே தயாரிக்க முடியும்.இதனால், உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஓடும் உணர்வுகளோடு பறை இசைக்கப்படும் போது, அதன் ஜீவன் நம்மை உற்சாகம் பெற வைக்கும். இசைப்பவரை திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியாது; இசைத்து முடியும் வரை, அந்த இடத்தை விட்டு நகர முடியாது. இனி வருங்காலம், பறை இசைக்காலமே என்பதை, என்னால் உறுதி யிட்டு சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

பறை இசையை போற்றும் ஜெயகுமாரை, 95008 56140 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
23-செப்-202116:05:56 IST Report Abuse
Kumar ஆதிகால மனிதர்களின் முதல் இசைக் கருவி அவர்கள் வாய் தான். அதனை தற்பொழுதுவரை மிகத் திறம்பட பயன்படுத்துபவர்கள் திராவிட கொடுக்குகள் மட்டுமே. வாழ்க வளமுட.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
22-செப்-202115:41:11 IST Report Abuse
ராஜா பின்னோக்கி போவது தான் இவர்களுக்கு தெரிந்த நாகரீகம். தமிழர்களின் ஆதி இசைக்கருவி தண்டோரா, சங்கு, சிகண்டி. பறை மட்டும் இல்லை.
Rate this:
Cancel
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
22-செப்-202113:20:32 IST Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan தமிழகத்தில் பறை, கேரளத்தில் கெண்டை மேளம் இரண்டையும் தடை செய்தால் நல்லது. மிகவும் இறைச்சலான, எரிச்சலூட்டும், தலைவலியை ஏற்படுத்தும், தற்கால வாழ்க்கைக்கு சிறிதும் பொறுத்தமற்ற கருவிகள். இசைக்கும் இறைச்சலுக்கும் வேறுபாடு தெரியாதவர்கள் ஆதரவில் இயங்குகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X