கொரோனா பயண கட்டுப்பாடு: பிரிட்டனிடம் இந்தியா அதிருப்தி

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
நியூயார்க்: பிரிட்டன் அறிவித்துள்ள கொரோனா பயணக் கட்டுப்பாடுகளுக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டன் கொரோனா தொடர்பாக இந்தியாவுக்கு புதிய பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இது,இந்தியாவில் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.'டுவிட்டர்'ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள, வெளியுறவு துறைஅமைச்சர்
India, UK, quarantine

நியூயார்க்: பிரிட்டன் அறிவித்துள்ள கொரோனா பயணக் கட்டுப்பாடுகளுக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் கொரோனா தொடர்பாக இந்தியாவுக்கு புதிய பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இது,இந்தியாவில் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.


'டுவிட்டர்'


ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள, வெளியுறவு துறைஅமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பிரிட்டன் வெளியுறவு துறை அமைச்சர் எலிசபெத் டிரசை சந்தித்து பேசினார். அப்போது பிரிட்டனின் புதிய கொரோனா விதிமுறைகள் குறித்து இந்தியாவின் அதிருப்தியை அவர் தெரிவித்தார்.


latest tamil news


இது குறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள 'டுவிட்டர்' செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: பிரிட்டனின் புதிய வெளியுறவு துறை அமைச்சர் எலிசபெத் டிரசை சந்தித்தேன். இருவரும் 2030ம் ஆண்டுக்கான முன்னேற்ற திட்டங்கள்குறித்து பரஸ்பரம் கருத்துகளை பரிமாறினோம். ஆப்கன், இந்தோ-பசிபிக் விவகாரங்கள் குறித்து ஆக்கபூர்வமாக இருவரும் விவாதித்தோம்.

பிரிட்டன் அறிவித்துள்ள கொரோனா பயண கட்டுப்பாடுகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து எடுத்துரைத்தேன். புதிய விதிமுறை பிரிட்டன் வரும் இந்தியர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண்பது இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என கூறினேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிரிட்டன் அறிவித்த புதிய பயண விதிமுறைகளின்படி இரண்டு 'டோஸ்' கொரோனா தடுப்பூசி மருந்தான, 'கோவிஷீல்டு' செலுத்தியிருந்தாலும், இந்தியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றே கருதப்படுவர். அவர்கள் பிரிட்டனுக்கு வரும்பட்சத்தில் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அக்.,4 முதல் அமலுக்கு வர உள்ள, பிரிட்டனின் இந்த புதிய விதிமுறைகள் இந்தியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
22-செப்-202110:35:48 IST Report Abuse
M  Ramachandran இந்த விதியை எல்லா வெள்ளையக்கார நாடுகளுக்கும் கடைபிடிக்குமா? இதனை இந்தியாவும் எதிர் வினையாக பின் பற்றினால் பிரிட்டன் யேற்குமா?
Rate this:
Cancel
22-செப்-202110:13:25 IST Report Abuse
ஆரூர் ரங் COVISHIELD தடுப்பூசி ASTRA ZENICA எனும் பிரிட்டிஷ் நிறுவன கூட்டுறவுடன் இங்கும் உருவானதுதான்😋. நாம் மேல்நாட்டு MNC தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தாமதமாக அனுமதித்ததற்கு பழி வாங்குகிறார்கள் . இன்னும் அந்த வெள்ளையரின் ஆதிக்கத் திமிர் அடங்கமறுக்கிறது ஆத்ம நிர்பார் திட்டத்தை சீர் குலைக்க சதி
Rate this:
Cancel
Sundara Raman - bengaluru,இந்தியா
22-செப்-202104:39:54 IST Report Abuse
Sundara Raman பிரிட்டன் இந்தியர்கள் முன்ன்னேறுவதை விரும்பவில்லை. இந்தியாவிற்கு பிரிட்டிஸ்காரர்கள் வந்தால் ஒரு மாதம் quarantine ல் போடவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X