போலி சாமியார் கைது: இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
தேசிய நிகழ்வுகள்:ராணுவ விமானிகள் பலிஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் பட்னிடோப் பகுதியில், ராணுவ ஹெலிகாப்டர் அங்குள்ள மலை மீது மோதியது. நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டரில் இருந்த இரு ராணுவ விமானிகளை பொதுமக்கள் மீட்டனர். மருத்துவமனை செல்லும் வழியில் அவர்கள் இறந்தனர்.தங்கச் சங்கிலி பறித்தவர் கைதுபுதுடில்லி: டில்லியில் நடந்து சென்ற
Crime, Murder, Crime Roundup, Dinamalar


தேசிய நிகழ்வுகள்:ராணுவ விமானிகள் பலி


ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் பட்னிடோப் பகுதியில், ராணுவ ஹெலிகாப்டர் அங்குள்ள மலை மீது மோதியது. நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டரில் இருந்த இரு ராணுவ விமானிகளை பொதுமக்கள் மீட்டனர். மருத்துவமனை செல்லும் வழியில் அவர்கள் இறந்தனர்.


தங்கச் சங்கிலி பறித்தவர் கைது


புதுடில்லி: டில்லியில் நடந்து சென்ற பெண்ணிடம், 'பைக்'கில் வந்த ஒருவர் சமீபத்தில் தங்கச் சங்கிலியை பறித்தார். பைக்கின் பதிவு எண்ணை சரியாக கவனிக்காத பெண், கடைசி இரு எண்களை மட்டும் கூறினார். போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன், மாவட்ட நீதிபதியின் தலைமையில் இயங்கும் தன்னார்வ பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த முகுல் வர்மா என்பவரை கைது செய்தனர்.


சிறுமிக்கு ஆபாச வீடியோ; போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் அஜ்மீரில் சிறுமிக்கு ஆபாச குறுஞ்செய்தி மற்றும் 'வீடியோ' அனுப்பிய வழக்கில், போலீஸ்காரர் விக்ரம் சிங் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது 'போக்சோ' உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.


ரூ.700 கோடி மோசடி


புதுடில்லி: மேற்கு வங்கத்தின் கோல்கட்டா, துர்காபூர், அசன்கோலில் உருக்கு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் 25க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் வருமான வரி அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதில் விற்பனை மற்றும் கொள்முதலில் போலி ஆவணங்கள் வாயிலாக 700 கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்து இருப்பதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


போலி சாமியார் கைது


பால்கர்: மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில், உடல் நிலை பாதிக்கப்பட்ட, 30 வயது பெண் தன் பிரச்னையை தீர்க்க கோரி, ஹேம்ராஜ் அம்பலால் நாக்தா, 66, என்ற சாமியாரிடம் சென்றார். அந்த பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறிய சாமியார், அதை விரட்டுவதற்காக அவரை சரமாரியாக தாக்கினார். படுகாயம் அடைந்த அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் போலி சாமியாரை கைது செய்தனர்.


latest tamil newsதமிழக நிகழ்வுகள்:பெண் ஊழியருக்கு 'டார்ச்சர்'


பெரம்பலுார்: பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் விதவை பெண் ஒருவருக்கு, தற்காலிக டிரைவராக பணியாற்றி வரும் திருமணமான வாலிபர் ஒருவர், இரண்டு ஆண்டுகளாக, மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., அனுப்பியும், நேரிலும், 'செக்ஸ் டார்ச்சர்' கொடுத்துள்ளார்.அந்த பெண் ஊழியர், எஸ்.எம்.எஸ்., ஆதாரங்களுடன் கலெக்டரிடம் புகார் அளிக்க முயன்றார். தற்காலிக டிரைவரின் ஆதரவு அதிகாரிகள் சிலர் பெண் அலுவலரை மிரட்டி, திருப்பி அனுப்பியுள்ளனர். 'கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பெண் ஊழியர் வலியுறுத்தி உள்ளார்.


சத்துணவு ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'


கடலுார்: கடலுார் மாவட்டம், பூதங்கட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் உணவு சாப்பிட்ட 17 குழந்தைகள் மயக்கம் அடைந்தனர். கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.கலெக்டர் பாலசுப்ரமணியம் விசாரணையில், பல்லி விழுந்த உணவை குழந்தைகள் சாப்பிட்டது தெரிந்தது. பணியில் அஜாக்கிரதையாக இருந்த அங்கன்வாடி மைய பணியாளர் ஜெயசித்ரா, சமையல் உதவியாளர் அம்சவள்ளி ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.


பா.ஜ., ஒன்றிய செயலாளர் கொலை


தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெரியகாரையைச் சேர்ந்த கதிரவன். 40. தேவகோட்டை ஒன்றிய பா.ஜ., பொது செயலாளர். வெளிநாட்டில் பணியாற்றி விட்டு இங்கு வந்தவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நேற்று மாலை 5:40 மணிக்கு புறவழிச்சாலையில் காவனவயல் சந்திப்பில் பாஸ்ட் புட் கடையில் பேசிக்கொண்டு இருந்த போது பைக்கில் வந்த இருவர் கதிரவனை வெட்டினர். தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. கீழக்காவனவயலை சேர்ந்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


குடும்பத்துடன் விஷம் குடித்த ஜவுளி வியாபாரி


ராஜபாளையம் : கேரளாவில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் ராஜபாளையம் சொக்கநாதன்புத்துார் மேலுார் துரைச்சாமிபுரத்தை சேர்ந்த குமார் 36, தேவி 33, மகள்கள் குரு தர்ஷினி 9, தேவதர்ஷினிக்கு 1, விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்றார்.

மேலுார் துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் குமார். இவர் மனைவி , தனது இரு குழந்தைகளுடன் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே எரூரில் தங்கி ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். அங்கு ரூ. 10 லட்சம் கொடுத்து வீடு ஒத்திக்கு எடுத்து தங்கியிருந்தார். சூழ்நிலை காரணமாக ஒத்திக்கு கொடுத்த பணத்தை கேட்டும் கிடைக்காததால் இரு நாள் முன்பு சொந்த ஊருக்கு குடும்பத்துடன் திரும்பினார்.விரக்தியில் இருந்த குமார், மனைவி குழந்தைகளுடன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை அருகிலுள்ளவர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


லஞ்சம் பெற்ற சர்வேயருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை


திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த ராமராஜ், 2009 ல் விருவீடு பிர்க்கா நில அளவையராக பணிபுரிந்தார். அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி சதீஷ்குமாருக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்க ராமராஜ், ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டார். சதீஷ்குமாரிடம் அவர் ரூ.6 ஆயிரம் லஞ்சம்பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.இவ் வழக்கை விசாரித்த திண்டுக்கல் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா , லஞ்சம் பெற்ற ராமராஜூக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ரூ.15ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.


ரூ.15 கோடி நிலம் மீட்பு


திருப்பூர்: திருப்பூரை அடுத்துள்ள நல்லுாரில் விஸ்வேஸ்வர சுவாமி விசாலாட்சியம்மன் கோவில், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமாக, 148.38 ஏக்கர் நிலம் உள்ளது. ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலங்கள் படிப்படியாக மீட்கப்பட்டு வருகின்றன.நல்லுார் கிராமத்தில் 1.67 ஏக்கர் நிலம், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. இணை கமிஷனர் நடராஜன் உத்தரவுப்படி, திருப்பூர் உதவி கமிஷனர் வெங்கடேஷ் தலைமையிலான குழு, நேற்று நிலத்தை மீட்டு அறிவிப்பு பலகை வைத்தது.


சிலை திருடிய தந்தை, மகன் கைது


கோவை: திருப்பூர் மாவட்டம், பருவாய் அருகே நீலியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 2 அடி உயரமுள்ள ஐம்பொன் அம்மன் சிலை இருந்தது. கடந்த, 2018ல் இச்சிலையுடன், கிரீடம், அரை சவரன் தங்க காசு திருட்டு போயின. மூன்று ஆண்டுகளான நிலையில், கோவை சரக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், முருகேஷ், 63, அவரது மகன் திருமூர்த்தி, 21, மற்றும் வடிவேல், 35, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். அரை சவரன் தங்க காசு, கிரீடம் பறிமுதல் செய்யப்பட்டன.


கள்ளத்தொடர்பு அம்பலம்; ஜோடி துாக்கிட்டு தற்கொலை


ராணிப்பேட்டை: கள்ளத்தொடர்பு வெளியே தெரிந்ததால், கள்ளக்காதல் ஜோடி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், வெள்ளகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 40; மனைவி சரிதா, 34. இருவரும் கட்டட தொழிலாளர்கள். தம்பதிக்கு மூன்று மகள்கள், இரு மகன்கள். இதில் ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது. வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் பாரதி, 36; கட்டட தொழிலாளி. இவருக்கு மனைவி, மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வெள்ளகுளம் காட்டுப் பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் நேற்று பாரதி - சரிதா இருவரும் ஜோடியாக துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.


பெண்ணிடம் ரூ.2.37 லட்சம் மோசடி


சேலம்: லண்டனில் இருந்து 25 ஆயிரம் பவுண்ட் பரிசு அனுப்புவதாக கூறி, மேட்டூர் பெண்ணிடம் 2.37 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
23-செப்-202123:11:36 IST Report Abuse
DARMHAR உளவுத்துறை போலி சாமியார்களை கண்டு பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் .
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
22-செப்-202117:41:26 IST Report Abuse
DVRR ரூ.6 ஆயிரம் லஞ்சம்???இரண்டு ஆண்டுகள் சிறை என்றால் நம்முடைய அரசியல்வாதிகள் ஒரு சிறிய கவுன்சிலரின் உதவியாளர் முதல் மிக மிக மிக பெரிய அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு கல்பம் சிறை தண்டனை????
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
22-செப்-202117:37:52 IST Report Abuse
DVRR மேற்கு வங்கத்தின்??ரூ.700 கோடி மோசடி???ஓஹோ முஸ்லீம் பேகம் மும்தாஜ் சொத்தில் ரூ 700 கோடி அதிகமாகி விட்டதா??? வெறும் ரூ 6,000 கோடி தான் இருக்கின்றது அபிஷேக்கிடம் (முஸ்லீம் பேகம் மும்தாஜின் மகன் அதாவது அண்ணன் மகன் என்ற போர்வையில்)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X