ஊரக உள்ளாட்சி தேர்தல்: கேட்ட இடத்தை ஒதுக்காததால் அ.தி.மு.க., மீது பா.ஜ., அதிருப்தி

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில், கேட்ட இடங்களை வழங்காமல், தாங்கள் ஒதுக்கும் இடங்களில் போட்டியிடும்படி வற்புறுத்துவதால், அ.தி.மு.க., மீது, பா.ஜ.,வினர் அதிருப்தி அடைந்து உள்ளனர்.உள்ளாட்சி தேர்தல் இடபங்கீடு தொடர்பாக, அ.தி.மு.க., மூத்த தலைவர்களுடன், பா.ஜ., சார்பில் மாநில பொதுச் செயலர் கரு.நாகராஜன், கராத்தே தியாகாராஜன் உள்ளிட்டோர் இடம் பெற்ற குழு பேச்சு நடத்தியது. அத்துடன், பா.ஜ.,
ADMK, BJP, rural local body elections

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில், கேட்ட இடங்களை வழங்காமல், தாங்கள் ஒதுக்கும் இடங்களில் போட்டியிடும்படி வற்புறுத்துவதால், அ.தி.மு.க., மீது, பா.ஜ.,வினர் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் இடபங்கீடு தொடர்பாக, அ.தி.மு.க., மூத்த தலைவர்களுடன், பா.ஜ., சார்பில் மாநில பொதுச் செயலர் கரு.நாகராஜன், கராத்தே தியாகாராஜன் உள்ளிட்டோர் இடம் பெற்ற குழு பேச்சு நடத்தியது. அத்துடன், பா.ஜ., சார்பில், ஒன்பது மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் குழுவினரும், அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர். இதன்பின், பா.ஜ., போட்டியிடும் இடங்களை இறுதி செய்ய, நேற்று முன்தினம் பா.ஜ., நிர்வாகிகள், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் சென்று பேசினர். இரு தரப்பினரும் பேசிக் கொண்டிருந்த போதே, அ.தி.மு.க.,வின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியானது.


latest tamil news



பேச்சின் போது, பா.ஜ., கேட்ட இடங்களை ஒதுக்காமல், தாங்கள் கூறும் இடங்களில் போட்டியிடுமாறு, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியுள்ளனர். இது, பா.ஜ.,வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம், பா.ஜ.,வுக்கு குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கி வைத்து விட்டே, அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து பேச போதிய அவகாசம் இல்லாததால், உள்ளூர் நிர்வாகிகளுடன் கலந்து பேசி, குறிப்பிட்ட இடங்களில் போட்டியிட, பா.ஜ., முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
22-செப்-202112:58:32 IST Report Abuse
Vittalanand கூட்டணியில் இருந்து காங்கிரசை கழற்றிவிட்டபோது ஜெயலலிதா சொன்னது எஸ்ட்ரா லக்ககேஜ்
Rate this:
Cancel
Subash - Chennai,இந்தியா
22-செப்-202111:01:04 IST Report Abuse
Subash இந்த இரண்டு மக்கள் விரோத கும்பல்கள் அடித்துக்கொள்ளும் காலம் வரும். சொரணையற்ற கூட்டம்.
Rate this:
22-செப்-202114:25:50 IST Report Abuse
Vittalanandஆமாம் திராவிட கூட்டம் தானே...
Rate this:
Cancel
Thirumal Kumaresan - singapore,சிங்கப்பூர்
22-செப்-202109:38:24 IST Report Abuse
Thirumal Kumaresan பிஜேபி காரனுக்கு தன் மேல் என்று நம்பிக்கை வருகிறதோ அன்று தாமரை மலரும்.அடுத்தவன் தோளில் ஏறுவதை நிறுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X