ஊர்க்காவல் படைக்கு ஊதியத்தை அரசு உயர்த்தும்: உயர் நீதிமன்றம் நம்பிக்கை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஊர்க்காவல் படைக்கு ஊதியத்தை அரசு உயர்த்தும்: உயர் நீதிமன்றம் நம்பிக்கை

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (2)
Share
சென்னை: 'ஊர்க்காவல் படையினருக்கான ஊதியத்தை அரசு உயர்த்தும்' என்று, சென்னை உயர் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தாக்கல் செய்த மனு: போலீசாருக்கு உதவும் வகையில், ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது. அவர்களுக்கு தினமும், 560 ரூபாய் ஊதியம் என ஐந்து நாட்கள் மட்டுமே பணி நாட்களாக நிர்ணயித்து, 2007ல், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. பின், பணி நாட்களை
Madras HC, High Court, Annamalai

சென்னை: 'ஊர்க்காவல் படையினருக்கான ஊதியத்தை அரசு உயர்த்தும்' என்று, சென்னை உயர் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தாக்கல் செய்த மனு: போலீசாருக்கு உதவும் வகையில், ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது. அவர்களுக்கு தினமும், 560 ரூபாய் ஊதியம் என ஐந்து நாட்கள் மட்டுமே பணி நாட்களாக நிர்ணயித்து, 2007ல், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. பின், பணி நாட்களை 10 நாட்களாக அதிகரித்து 2019 பிப்ரவரியில் உத்தரவிடப்பட்டது.


latest tamil news


நான்கு மணி நேரம் வரை பணியில் இருப்பவர்களுக்கு 280 ரூபாய்; எட்டு மணி நேரம் பணியில் இருந்தால் மட்டுமே, 560 ரூபாய் வழங்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த அரசாணையை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அண்ணாமலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மாதம் 5,600 ரூபாய் மட்டுமே ஊதியமாக கிடைக்கிறது; 17 ஆயிரத்து, 600 ஊர்க்காவல் படையினர் உள்ளனர். அவர்களில் 76 சதவீதம் பேர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.

'புதுச்சேரி அரசு, ஊர்க்காவல் படையினருக்கான ஊதியத்தை உயர்த்தி உள்ளது. தமிழகத்திலும் ஊதியத்தை உயர்த்த வேண்டும்' என்றார். தமிழக அரசு தரப்பில், 'குறைந்தபட்சமாக, 10 நாட்கள் பணி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது; தேவைப்பட்டால் கூடுதல் நாட்கள் பணி வழங்கப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டது.


latest tamil news




இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:


அரசு தரப்பில் 10 நாட்கள் பணி வழங்குவதாக கூறினாலும், பலரை மாதம் முழுதும் பணி அமர்த்துகின்றனர்; இதை முறைப்படுத்த வேண்டும். தேர்வு மற்றும் பணிக்கு உரிய விதிகளை வகுக்க வேண்டும். ஊர்க்காவல் படையில் உள்ள ஒவ்வொருவருக்கும், குறைந்தபட்சமாக நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் கிடைக்கும் வகையில், பணி வழங்க வேண்டும். ஊர்க்காவல் படையினருக்கான ஊதியத்தை அரசு உயர்த்தும் என்று நம்புகிறோம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X