பொது செய்தி

இந்தியா

குழந்தைகளுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி சோதனை நிறைவு

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஐதராபாத்: குழந்தைகளுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி சோதனை முடிவடைந்துள்ளதாக, 'பாரத் பயோடெக்' நிறுவனம் தெரிவித்துள்ளது.தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் 'கோவாக்சின்' தடுப்பூசியை தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா கூறியதாவது: இந்த மாதம் 3.50 கோடி 'டோஸ்' என்ற அளவில் உள்ள கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு, அடுத்த மாதம் 5.50
Covaxin, kids trial, Bharat Biotech, Krishna Ella

ஐதராபாத்: குழந்தைகளுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி சோதனை முடிவடைந்துள்ளதாக, 'பாரத் பயோடெக்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் 'கோவாக்சின்' தடுப்பூசியை தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா கூறியதாவது: இந்த மாதம் 3.50 கோடி 'டோஸ்' என்ற அளவில் உள்ள கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு, அடுத்த மாதம் 5.50 கோடியாக உயரும். குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனையில் இரு கட்டங்கள் நிறைவடைந்துள்ளன.


latest tamil news



இது குறித்த ஆய்வறிக்கை அடுத்த வாரம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்திடம் அளிக்கப் படும். இந்த பரிசோதனையில் 1,000 பேர் பங்கேற்றுள்ளனர். மூக்கு வழி தடுப்பூசி சோதனை மூன்று குழுக்களிடம் நடத்தப்படுகிறது. ஒரு குழுவுக்கு கோவாக்சின் தடுப்பூசி ஒரு டோஸ் உடன், மூக்கு வழியாக இரண்டாவது டோஸ் செலுத்தப்படுகிறது. இரண்டாவது குழுவுக்கு 28 நாட்கள் இடைவெளியில் மூக்கு வழியாகவே இரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மூன்றாவது குழுவில், முதல் டோஸ் மூக்கு வழியாகவும், அடுத்த டோஸ், தடுப்பூசி வாயிலாகவும் செலுத்தப்படுகிறது. இதில் 650 தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர். துணை நிறுவனங்கள் ஒத்துழைத்தால் மாதம் 10 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து தயாரிக்கலாம். மத்திய அரசு உள்நாட்டு தடுப்பூசி தேவைக்கு முன்னுரிமை அளிக்கிறது. அடுத்த ஆண்டு, ஜன., - மார்ச்சில் ஐ.நா.,வின் 'கோவாக்ஸ்' திட்டத்திற்கு தடுப்பூசி அனுப்ப மத்திய அரசு அனுமதிக்கும் என தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
22-செப்-202106:25:02 IST Report Abuse
Sanny இந்த செய்தி வாசிக்க முன் சில நிமிடத்துக்கு முன் சில நாட்ட்களுக்குமுன் இந்திய ஜோசியர் சொன்னதுபோல நாங்கள் ஆஸ்திரேலியாவில் 6. Magnitude அளவு நிலநடுக்கத்தை அனுபவித்தோம். இறையருளால் மனிதர்களுக்கு சேதம் ஏதும் எட்டப்படவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X