13 தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: நாட்டில் உள்ள 13 உயர் நீதிமன்றங்களுக்கு புதிதாக தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர். இது தொடர்பாக, உச்ச நீதிமன்ற 'கொலீஜியம்' மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.நாட்டில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை, 2021 மே மாத நிலவரப்படி 1,080 ஆக உள்ளது. ஆனால் தற்போது 420 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர்.உச்ச நீதிமன்ற தலைமை
Supreme Court Collegium, New Chief Justices , High Courts, Supreme Court, SC, HC, உச்ச நீதிமன்றம்

புதுடில்லி: நாட்டில் உள்ள 13 உயர் நீதிமன்றங்களுக்கு புதிதாக தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர். இது தொடர்பாக, உச்ச நீதிமன்ற 'கொலீஜியம்' மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

நாட்டில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை, 2021 மே மாத நிலவரப்படி 1,080 ஆக உள்ளது. ஆனால் தற்போது 420 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமிக்கப்பட்ட பின், உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் பணியை தீவிரப்படுத்தி உள்ளார்.

பல்வேறு உயர் நீதிமன்றங்களின் நியமனத்திற்காக இதுவரை 100க்கும் மேற்பட்ட பெயர்களை அவர் பரிந்துரை செய்து உள்ளார். இவரது பரிந்துரையின் அடிப்படையில், உச்ச நீதி மன்றத்தில் காலியாக இருந்த ஒன்பது நீதிபதிகளின் பணியிடங்கள் சமீபத்தில் ஒரே நேரத்தில் நிரப்பப்பட்டன. இந்நிலையில், உச்ச நீதிமன்ற கொலீஜியம் சமீபத்தில் கூடி விவாதித்தது. அப்போது பல்வேறு நீதிபதிகளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக நியமித்து பதவி உயர்வு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.


latest tamil news




பணி இடமாற்றம்


இது குறித்து, உச்ச நீதிமன்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கோல்கட்டா உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டாலை, அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

ரஞ்சித் வி.மோர், சதீஷ் சந்திர சர்மா, பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, ஆர்.வி.மாலிமாத், ரிது ராஜ் அவஸ்தி, அரவிந்த் குமார், பிரஷாந்த் குமார் மிஸ்ரா உள்ளிட்ட ஏழு பேரை பல்வேறு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, பரிந்துரையை ஏற்கும் பட்சத்தில் மேகாலயா, தெலுங்கானா, கோல்கட்டா, மத்திய பிரதேசம், கர்நாடகா, குஜராத் மற்றும் ஆந்திர உயர் நீதிமன்றங்களில் இவர்கள் நியமிக்கப்படுவர்.

மேலும், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தற்போது தலைமை நீதிபதிகளாக பதவி வகித்து வரும் ஐந்து நீதிபதிகளுக்கு பணி இடமாற்றம் வழங்கவும் கொலீஜியம் பரிந்துரைத்து உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால் 13 நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் புதிதாக நியமிக்கப்படுவர்.


சென்னை நீதிபதி


சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானத்தை கோல்கட்டா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவும் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பரேஷ் ஆர். உபாத்யாயாவை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
22-செப்-202107:38:21 IST Report Abuse
Darmavan கோஈஜியும் முறை நீக்கப்பட்டு மத்திய அரசே இதை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
22-செப்-202107:25:51 IST Report Abuse
Duruvesan இவங்க மட்டும் எக்ஸாம் எழுதாம டைரக்ட் ஜட்ஜ், ஆனா 1 வகுப்பு முதல் நாம எக்ஸாம் எழுதணும் 😪😪😪
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X