கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில், ஒன்பது பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவியர் மற்றும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய வழக்கில், 2019 பிப்ரவரியில் ஐந்து வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மேலும் எட்டு பெண்கள் அளித்த வாக்குமூலம் அடிப்படையில்,
பொள்ளாச்சி, பாலியல் வழக்கு, குற்றப்பத்திரிகை

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில், ஒன்பது பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவியர் மற்றும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய வழக்கில், 2019 பிப்ரவரியில் ஐந்து வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மேலும் எட்டு பெண்கள் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், ஹெரன்பால், 29; பாபு, 27; பொள்ளாச்சி அ.தி.மு.க., மாணவரணி செயலர் அருளானந்தம், 34, மற்றும் அருண்குமார் ஆகியோர், கடந்தாண்டு டிச., 6ல் கைது செய்யப்பட்டனர்.


latest tamil news



கோவை மகளிர் கோர்ட்டில், 2019 மே 24ல் சி.பி.ஐ., முதல் கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பின், நான்கு பேர் கைது செய்யப்பட்டதால், 1,000 பக்கம் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று தாக்கல் செய்தனர்.தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் 29க்கு நீதிபதி நந்தினிதேவி ஒத்தி வைத்தார். அன்று, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, சாட்சி விசாரணை தேதி அறிவிக்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-செப்-202121:07:28 IST Report Abuse
அப்புசாமி இந்தக் கேடிகளை ஜெட்டியோட, கை காலைக் கட்டி பாதிக்கப்பட்ட பெண்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதுதான் சரியான தண்டனை.
Rate this:
Cancel
22-செப்-202114:27:17 IST Report Abuse
A.Balasbramanian சாட்சிகளை எல்லாம் விசாரிச்சு முடிக்க ஒரு வருடம் ஆகிடும், அதனால் சராசரியாக 10 வருடம் தண்டனை கொடுத்து quick ஆக முடியுங்கள் என்னும் எவ்வளவோ முடிக்க வேண்டியது இருக்கு
Rate this:
Cancel
Siva Santhanam - Pune,இந்தியா
22-செப்-202111:02:41 IST Report Abuse
Siva Santhanam ஓவர் ஆக தின்று கொழுத்து விட்டால் உடம்பு இப்படி எல்லாம் செய்ய தூண்டும். முதல் தண்டனையாக இவனுக்கள் நெற்றியில் பச்சை குத்தி விட வேண்டும். இரண்டாவதாக இவனுங்களை பட்டினி போட்டு வாரம் ஒருவேளை மட்டும் வெறும் கஞ்சியை ஊற்றினால் போதும். அப்போதும் வெட்டியாக வைக்காமல் விவசாயத்தில் மாடுகளுக்கு பதிலாக இவனுங்களை உபயோகப் படுத்த வேண்டும். மூன்றாவதாக, எப்போதெல்லாம் எல்லையில் தீவிரவாதிகள் தாக்குகிறார்களோ அப்போதெல்லாம் இவனுங்களை அங்கே அனுப்பி மனிதக் கேடயங்களாக பயன்படுத்திக் கொண்டால் நமது படை வீரர்களுக்கும் அதனால் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏற்படும் இழப்பினைத் தடுக்கலாம். இடையில் நுழையும் மனித உரிமை பரிதாப கூட்டத்தினரை ஓரம் கட்டி விட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X