பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் நிலங்கள் அளவீடு: வரைபட தயாரிப்பு பணி தீவிரம்

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: தமிழகம் முழுதும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை 'ரோவர்' கருவி வாயிலாக அளந்து, வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.அறநிலையத் துறை கோவில்களுக்கு 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றை ரோவர் கருவியால் அளவிடும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். இதன் வாயிலாக எளிய முறையில் துல்லியமாக அளந்து, வரைபடங்கள் தயாரிக்கலாம்.
கோவில் நிலங்கள், அளவீடு, வரைபட தயாரிப்பு, temple land

சென்னை: தமிழகம் முழுதும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை 'ரோவர்' கருவி வாயிலாக அளந்து, வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அறநிலையத் துறை கோவில்களுக்கு 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றை ரோவர் கருவியால் அளவிடும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். இதன் வாயிலாக எளிய முறையில் துல்லியமாக அளந்து, வரைபடங்கள் தயாரிக்கலாம். ஆக்கிரமிப்புகள் மற்றும் காணாமல் போன புல எல்லை கற்களை கண்டறியலாம்.இதற்காக வருவாய்த் துறை சார்பில், 4 கோடி ரூபாய் மதிப்பிலான நவீன ரோவர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக, சென்னை கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 61.99 ஏக்கர் நிலம் அளவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, அனைத்து கோவில்களிலும் அசையா சொத்துக்களை கண்டறியும் குழு மற்றும் பரிசீலனை குழு அமைக்கப்பட்டு, நில அளவை செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணியில் 200 நில அளவையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


latest tamil newsதற்போது ஏராளமான கோவில்களில் அசையா சொத்துக்களின் வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு, அது தொடர்பான விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதன் வாயிலாக, கோவிலுக்கு சொந்தமான அசையா சொத்துக்கள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு, கோவில் வசம் சுவாதீனம் பெறப்படும் என அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


வரைபடம் தயாரிப்பு பணி தீவிரம்ஹிந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகம் முழுவதும் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களை நவீன ஜிஐஎஸ் தொழில்நுட்பத்துடன் நில அளவை செய்யும் பணி நடக்கிறது. ஜிஐஎஸ் நவீன தொழில்நுட்பத்தின்படி மேப்பிங் பணியை 200 நில அளவையாளர்கள் மூலம் நில அளவை பணிகள் நடக்கிறது.

அதன் அடிப்படையில் நாமக்கல், பரமத்திவேலூரில் உள்ள நாகேஸ்வரர் கோவில், காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், விநாயகர் கோவில், ஈரோடு, அந்தியூர் கெட்டி விநாயகர் கோவில், பிரம்மேஸ்வரர் கோவில், கொடுமுடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், தூத்துக்குடி சங்கர நாராயணசுவாமி கோவில், சங்கரன்கோயிலில் உள்ள திருமலைகுமாரசாமி கோவில், சேலம் சுகவனேஸ்வரர் கோவில், தேனீ ஆண்டிப்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உட்பட அனைத்து கோவில்களுக்கு சொந்தமான அசையா சொத்துகளின் வரைபடம் தயாரிக்கும்பணி நடக்கிறது.

கோவில்கள், அறக்கட்டளைகளுக்கு சொந்தமான அசையா சொத்துகள், விவசாய நிலங்கள், காலிமனைகள், காலியிடங்கள் என அனைத்தும் அளவீடு செய்து வரைபடம் தயாரிக்கும் பணி நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ரோவர் கருவிகள் மூலம் துவங்கி உள்ளது. இக்கருவியை கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நிறுவும்போது, செயற்கைகோள் மூலம் இந்த இடத்தின் வரைபடம் கிடைக்கும். விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு அது தொடர்பான விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இதன்மூலம் கோவிலுக்கு சொந்தமான அசையா சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்படும் எனக்கூறப்பட்டுஉள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh Kumar - Salem,இந்தியா
22-செப்-202111:39:53 IST Report Abuse
Suresh Kumar குரங்குகள் கையில் பூமாலை - திராவிஷக்கிருமிகளிடம் கோவில் ..காலத்தின் கொடுமை..
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
22-செப்-202109:18:35 IST Report Abuse
duruvasar இந்த டிஜிட்டல் காலத்திலும் , தமிழ்நாட்டில் பயாஸ்கோப் படங்களுக்கு மவுசு இருக்கிறது . காக்கையை ஓட்ட காதிலிருந்து தங்க தொங்கட்டானை வீசிய மூத்தகுடி தமிழினம். பழமையை பேசுவதில் சுகமோ சுகம்.
Rate this:
Cancel
22-செப்-202109:09:17 IST Report Abuse
ஆரூர் ரங் யாரோ குத்தகைக்கு எடுத்திருப்பதைப்😇 பிடுங்கி திமுக 😎உ.பிஸ் கையில் கொடுத்தால் அது ஆக்கிரமிப்பு அகற்றம். இது பாபு கொள்கை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X