ஆப்கன் அமைச்சரவை விரிவாக்கம் இப்போதும் பெண்களுக்கு இடமில்லை

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமைச்சரவையை விரிவுபடுத்தி உள்ளனர். ஆனால், இதிலும் ஒரு பெண்ணுக்கு கூட பதவி வழங்கப்படவில்லை.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய பின், தற்காலிக அமைச்சரவை உருவாக்கப்பட்டது. அங்கு தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து முடிவு அறிவிக்கப்படவில்லை.இந்நிலையில், புதிய அமைச்சரவையில் பெண்கள் இடம்பெறாதது
ஆப்கானிஸ்தான், தலிபான்கள் அமைச்சரவை, விரிவாக்கம், பெண்களுக்கு இடமில்லை,

காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமைச்சரவையை விரிவுபடுத்தி உள்ளனர். ஆனால், இதிலும் ஒரு பெண்ணுக்கு கூட பதவி வழங்கப்படவில்லை.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய பின், தற்காலிக அமைச்சரவை உருவாக்கப்பட்டது. அங்கு தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து முடிவு அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், புதிய அமைச்சரவையில் பெண்கள் இடம்பெறாதது பல்வேறு நாடுகளை அதிருப்தி அடையச் செய்தது.கடந்த 1996 - 2001 வரையிலான தலிபான்கள் ஆட்சியின் போது பெண்கள் கல்வி கற்க, வேலைக்கு செல்ல, பொது வாழ்க்கையில் ஈடுபட தடை விதிக்கப் பட்டது.'இது போன்ற அடக்குமுறையில் தலிபான்கள் ஈடுபடக் கூடாது' என, பல்வேறு நாடுகளும் கருதுகின்றன.


latest tamil news



எனவே ஆப்கன் அரசின் நடவடிக்கைகள் உலக அரங்கில் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன.'இவர்களின் நடவடிக்கையை பொறுத்து தான், தற்காலிக அரசை அங்கீகரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்' என, ஐ.நா., உட்பட பல்வேறு நாடுகளும் அறிவித்துள்ளன.

இந்நிலையில், தலிபான் அமைச்சரவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. துணை அமைச்சர்களாக பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதிலும் ஒரு பெண் கூட இடம் பெறவில்லை.

இது குறித்து, தலிபான் செய்தி தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் கூறியதாவது: ஹஸாராஸ் உள்ளிட்ட இன சிறுபான்மையினர், அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். பெண்களுக்கு பதவி வழங்குவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். ஐ.நா., எங்கள் அரசை அங்கீகரிக்க வேண்டும். ஐரோப்பா, ஆசியா மற்றும் இஸ்லாமிய நாடுகள் எங்களுடனான துாதரக உறவை பேண வேண்டும். காரணம் இன்றி அதைத் தட்டி கழிக்கக் கூடாது. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவியர் பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டிருப்பது தற்காலிகமான நடவடிக்கை தான். அவர்கள் விரைவில் பள்ளிக்கு திரும்புவர்.இவ்வாறு அவர் கூறினார்.


ஐ.பி.எல்., ஒளிபரப்புக்கு தடை!


ஆப்கானிஸ்தானில் 400 விளையாட்டுகளுக்கு கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அவற்றை பெண்கள் விளையாடலாமா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப ஆப்கானிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல்., போட்டிகளில் பெண்கள் அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடுவதாலும், அரங்கில் பெண்கள் அமர்ந்து போட்டியை காண்பதாலும் அதை, 'டிவி'யில் ஒளிபரப்ப தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
23-செப்-202113:14:12 IST Report Abuse
jayvee ஆப்கான் அமைச்சரவை ஒரு மனித கசாப்பு கடை.. அங்கு பூக்களுக்கு வேலை இல்லை
Rate this:
Cancel
22-செப்-202119:24:14 IST Report Abuse
அப்புசாமி தாடி இல்லாத ஒருத்தர் இருக்காரே... அவர் தாலிபானா? பக்கிஸ்தான் ஆளோ?
Rate this:
Cancel
Suresh Kumar - Salem,இந்தியா
22-செப்-202114:59:50 IST Report Abuse
Suresh Kumar இஸ்லாமிய சகோதரிகள் இப்போதாவது உணரவேண்டும்... அவர்கள் பெற்றெடுப்பது குழந்தைகளை அல்ல, தங்களையே அடிமைப்படுத்தும் பயங்கரவாதிகளை என்று...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X