அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிக்பாஸில் கமல் 'பிசி': மக்கள் நீதி மய்யத்தினர் ஏமாற்றம்!

Added : செப் 22, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை : சட்டசபை தேர்தலின் போது, முதல் அணியாக கூட்டணியை அறிவித்த கமல், தற்போது பிக்பாஸில், 'பிசி'யாக இருப்பதால், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இன்னும் அறிவிக்காமல் உள்ளார் என, அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியினரே புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்களை
Kamal, Kamal Haasan, MNM

சென்னை : சட்டசபை தேர்தலின் போது, முதல் அணியாக கூட்டணியை அறிவித்த கமல், தற்போது பிக்பாஸில், 'பிசி'யாக இருப்பதால், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இன்னும் அறிவிக்காமல் உள்ளார் என, அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியினரே புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. பல இடங்களில் பிரசாரமும் களை கட்டி வருகிறது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிகிறது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்குவதாக அறிவித்துள்ள கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி, இன்னமும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவில்லை. கட்சியை மறந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில், கமல் பிசியாக இருப்பதாக கட்சியினர் கூறுகின்றனர்.


latest tamil news


'தேர்தலுக்காக கட்சியை தயார்படுத்த வேண்டிய நிலையில், கமல் மக்களையும், மய்யத்தையும் மறந்து, பிக்பாஸில் பிசியாக இருப்பதால், இந்த உள்ளாட்சி தேர்தலிலும், பூஜ்யத்தோடு நடையை கட்ட வேண்டியது தான்' என்றும் கட்சியினர் புலம்புகின்றனர்.

அதேநேரத்தில், 'வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும்; அதில் நம் பெயர் இடம் பெற்று மனுத்தாக்கல் செய்யலாம்' என மய்ய நிர்வாகிகள் பலர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
22-செப்-202116:26:27 IST Report Abuse
Vena Suna Rockstar போட்டியில் தலைமை தாங்க வரும் இவருக்கு கட்சியில் என்ன கிழிக்க முடியும்? மக்கள் BJP க்கு ஆதரவு கொடுத்தால் நன்றாக முன்னுக்கு வரலாம்.
Rate this:
Cancel
enkeyem - sathy,இந்தியா
22-செப்-202116:14:49 IST Report Abuse
enkeyem அவன் ஒரு நடிகன். பிழைப்பைத்தேடி போய்விட்டான்.. அவனை நம்பி ஏமாந்து திரியும் முட்டாள்களே உங்களது பிழைப்பை கவனியுங்கள்
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
22-செப்-202111:59:09 IST Report Abuse
vpurushothaman இவரையெல்லாம் நம்பி கட்சிக்குப் போனா இப்படித்தான். இன்னமும் இந்த மண் குதிரையை நம்பினால் அம்போதான். சினிமாதான் எனது உயிர் - மற்றதெல்லாம் ....என்று சொன்னவர் இவர். பிக் பாஸில் பணம் கிடைக்கும். இதில் போகும். எதில் கவனம் இருக்கும் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X