ஜாதக பொருத்தம் இல்லை என கூறி காதலித்த பெண்ணை கழற்றி விடுவதா?| Dinamalar

'ஜாதக பொருத்தம் இல்லை என கூறி காதலித்த பெண்ணை 'கழற்றி' விடுவதா?'

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (15)
Share
மும்பை: 'திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, ஜாதக பொருத்தம் இல்லை என்பதைக் காரணமாக கூறி, அந்த பெண்ணிடம் இருந்து விலகுவதை அனுமதிக்க முடியாது' என, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த அவிஷேக் மித்ரா என்பவர், தன்னுடன் வேலை பார்த்த பெண்ணைக் காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக
ஜாதகப் பொருத்தம், பொய் வாக்குறுதி, மும்பை கோர்ட்,

மும்பை: 'திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, ஜாதக பொருத்தம் இல்லை என்பதைக் காரணமாக கூறி, அந்த பெண்ணிடம் இருந்து விலகுவதை அனுமதிக்க முடியாது' என, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த அவிஷேக் மித்ரா என்பவர், தன்னுடன் வேலை பார்த்த பெண்ணைக் காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து அந்த பெண்ணுடன் பலமுறை உறவு கொண்டார்.ஒரு கட்டத்தில் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். அவிஷேக் வற்புறுத்தல் காரணமாக கரு கலைப்பு செய்தார். நாளடைவில் அந்த பெண்ணிடம் இருந்து அவிஷேக் மித்ரா விலக துவங்கினார்.


latest tamil news


திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் கேட்டபோது, 'ஜாதக பொருத்தம் இல்லாததால் திருமணம் செய்து கொள்ள முடியாது' என்றார். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அவிஷேக் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'மனுதாரருக்கு பெண்ணை ஏமாற்றுவது நோக்கமல்ல. 'ஜாதக பொருத்தம் இல்லாததால் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே வழக்கில் இருந்து அவிஷேக்கை விடுவிக்க வேண்டும்' என, வாதிடப்பட்டது.

இதை கேட்ட நீதிபதி, 'மனுதாரர் பொய் வாக்குறுதி அளித்து அந்த பெண்ணை பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டதற்கான முகாந்திரம் உள்ளது. 'எனவே, ஜாதக பொருத்தத்தை காரணமாக சொல்லி திருமணத்தை தவிர்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது' என, உத்தரவிட்டார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X