பொது செய்தி

தமிழ்நாடு

விதிகளைமீறி நகைக்கடன்: திருப்பி வசூலிக்க அரசு உத்தரவு

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை: ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு மேல் நகைக்கடன் பெற்றவர்களிடம், கடன்களை திருப்பி வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக அனைத்து கூட்டுறவு மண்டல மேலாண் இயக்குநர்களுக்கும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கடன் தள்ளுபடிக்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் வெவ்வேறு கூட்டுறவு
நகைக்கடன், கூட்டுறவு சங்கம், கடன்தொகை,

சென்னை: ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு மேல் நகைக்கடன் பெற்றவர்களிடம், கடன்களை திருப்பி வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அனைத்து கூட்டுறவு மண்டல மேலாண் இயக்குநர்களுக்கும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கடன் தள்ளுபடிக்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு அதிகமாக நகைக்கடன் பெற்றுள்ளனர்.


latest tamil news


இது தொடர்பான ஆதாரங்கள் ஆதார் எண் மற்றும் ரேசன் கார்டு தகவல் அடிப்படையில் சேகரிக்கப்பட்டு உள்ளது. விதிமீறி 5 சவரனுக்கு மேல் நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து நகைக்கடன் தொகையை வசூலிக்க வேண்டும். கடன் தவணையை கட்ட தவறியவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
22-செப்-202118:24:55 IST Report Abuse
M  Ramachandran எப்படியெல்லாம் மக்கள் யோசிக்கிறார்கள். அரசு எவ்வழி மக்களும் அவ்வழியே
Rate this:
Cancel
Vaiyapuri Rajendran - Chennai,இந்தியா
22-செப்-202114:23:30 IST Report Abuse
Vaiyapuri Rajendran தேர்தல் வரும் முன்னரே கடன் தள்ளுபடி கிடைக்கும் என்ற நோக்கத்தில் நகைக்கடன் பெறுவதற்கு முயற்சி செய்து ஒரு நபர் எவ்வளவு கடன் பெறலாம் என்ற உச்சவரம்பு உள்ளது. அப்படியிருக்க ஒரே வங்கியில் அதாவது அவர்கள் வசிக்கும் எல்லைக்கு உட்பட்ட வங்கியில் கடன் பெறுவதுதான் வழக்கம் .. ஆனால் ஐந்து சவரன் வரை நகை கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி என்று தகவல் தெரிந்து பலரும் பல சங்கங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கடன் பெற்று உள்ளதை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் இந்த நகை கடன் பெற்றவர்களின் உண்மைத்தன்மை அறிய எடுத்த நடவடிக்கையில் இப்படி தள்ளுபடி பெறலாம் என்ற உள்நோக்கத்துடன் ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே ஆதார் அட்டையில் பெற்றவர்களின் பட்டியலை துல்லியமாக கண்டுபிடித்து உள்ளது பாராட்டுக்கு உரியது.. உண்மையாக எழை விவசாயிகள் ஐந்து சவரன் நகை அடகு வைத்து வேளாண் பணிக்கு செலவு செய்தவர்கள் பயன் பெறும் வகையில் துரிதமாக செயல்பாட்டு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு வேளாண் கிராமப்புற வங்கிகளில் ஒருவருக்கு ஒருவர் அதனை மேலும் ஒருவர் சரிபார்த்து எடுத்து உள்ள இந்த உண்மையான விவசாயிகள் பயன்பெறும் திட்டத்தை வரவேற்க வேண்டும். .இந்த தகவல்களை துல்லியமாக கண்டு பிடித்த அனைத்து அலுவலர்களின் பணி பாராட்டுக்கு உரியது...கடந்த காலங்களில் தகுதியில்லாத பலர் பயன் பெற்றனர். அதனை தவிர்க்க எடுத்த நடவடிக்கை சரியானதே ...
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
22-செப்-202119:19:50 IST Report Abuse
கல்யாணராமன் சு.மிகவும் சரியான கருத்து....... மக்களுக்கு பயன் தரும் திட்டங்களை அரசு கொண்டுவரும்போது, அதிலும் ஏமாற்றி பணம் திருடும் கூட்டங்களை ஒழிக்கவேண்டும்........ இந்த மாதிரியான ஏமாற்று பேர்வழிகளை கண்டறிந்து, அதோடு மட்டும் நின்றுவிடாமல், இந்த மாதிரி எத்தனை திமுக உறுப்பினர்கள் இந்த வருடம் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் முன் தேதியிட்டு இப்படி நகைக்க கடன் வாங்கியுள்ளார்கள் என்பதையும் கண்டுபிடித்து அவர்களையும் தண்டிக்கவேண்டும் .......
Rate this:
Cancel
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
22-செப்-202112:46:12 IST Report Abuse
செல்வம் செம்புகள் வீட்டில் விஷேஷம் என்றால் கூப்பிடுங்கள் டக்ளஸை சாரி வளைகாப்பு ராஜனை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X