பொது செய்தி

இந்தியா

சார்க் அமைப்பில் தலிபான்களுக்கு பிரதிநிதித்துவம்: பாக்., கோரிக்கையால் மாநாடு ரத்து

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: வரும் 25 ம் தேதி நடக்க இருந்த சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் தலிபான் பிரதிநிதிகளையும் அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியது. இதில், ஒருமித்த முடிவு எட்டப்படாததால், மாநாடு ரத்து செய்யப்பட்டது.தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம், பூடான், வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள சார்க் அமைப்பின்
saarc, pakisan, afghanistan, meet, cancel,சார்க், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கூட்டம், ரத்து

புதுடில்லி: வரும் 25 ம் தேதி நடக்க இருந்த சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் தலிபான் பிரதிநிதிகளையும் அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியது. இதில், ஒருமித்த முடிவு எட்டப்படாததால், மாநாடு ரத்து செய்யப்பட்டது.

தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம், பூடான், வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள சார்க் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு வரும் 25 ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருந்தது. இந்த மாநாட்டிற்கு, நேபாளம் தலைமை ஏற்க இருந்த நிலையில், தலிபான் பிரதிநிதிகளையும், இந்த மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.


latest tamil news


ஆனால், இதில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஒருமித்த முடிவு எடுக்கப்படவில்லை. பெரும்பாலான நாடுகள், மாநாட்டில் ஆப்கனுக்காக, காலி இருக்கை ஒன்றை வைக்கலாம் எனக்கூறியதாக தெரிகிறது. இதனை பாகிஸ்தான் ஏற்று கொள்ளவில்லை. இதனையடுத்து வரும் 25ம் தேதி நடைபெற இருந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
22-செப்-202117:17:39 IST Report Abuse
vnatarajan தற்போதைய ஆப்கான் ஆட்சியை உலகில் பல நாடுகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் சார்க் க்ரூப்பில் எப்படி அனுமதிக்கமுடியும்
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
22-செப்-202113:11:44 IST Report Abuse
S. Bharani நல்ல முடிவு... பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இரட்டையருக்கு மூக்குடைப்பு
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
22-செப்-202112:25:12 IST Report Abuse
Ramesh Sargam தலிபான்களுக்கு பிரதிநிதித்துவம் - பாக்கிஸ்தான் எண்ணம் இப்பொழுது புரிந்திருக்க வேண்டும் மற்ற நாடுகளுக்கு. Taliban-Pakistan, both synonyms. பிரிக்க முடியாதவை. இரண்டும், தீவிர வாதத்திற்கு துணை போகும். இரண்டையும் ஒழிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X