இப்படி பேசிய அந்த அமைச்சர், அதன் பிறகு, உதயநிதியை சந்தித்து, 'உங்களை சொல்லலைண்ணா...' என, நிச்சயம் கூறியிருப்பார்..

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
'விஜய் உட்பட நடிகர்களின் அரசியல் வருகை தமிழகத்தில் தோல்வியை தான் சந்தித்துள்ளது; தி.மு.க., ஆட்சியின் போது நடிகர்களின் தாக்கம் எடுபடாது' என, தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். இதன் மூலம் உதயநிதி ஸ்டாலினின் அரசியல், தோல்வியுறும் என்கிறாரா?- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி'இப்படி பேசிய அந்த அமைச்சர், அதன் பிறகு, உதயநிதியை சந்தித்து, 'உங்களை
இப்படி பேசிய அந்த அமைச்சர், அதன் பிறகு, உதயநிதியை சந்தித்து, 'உங்களை சொல்லலைண்ணா...' என, நிச்சயம் கூறியிருப்பார்..

'விஜய் உட்பட நடிகர்களின் அரசியல் வருகை தமிழகத்தில் தோல்வியை தான் சந்தித்துள்ளது; தி.மு.க., ஆட்சியின் போது நடிகர்களின் தாக்கம் எடுபடாது' என, தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். இதன் மூலம் உதயநிதி ஸ்டாலினின் அரசியல், தோல்வியுறும் என்கிறாரா?
- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி


'இப்படி பேசிய அந்த அமைச்சர், அதன் பிறகு, உதயநிதியை சந்தித்து, 'உங்களை சொல்லலைண்ணா...' என, நிச்சயம் கூறியிருப்பார்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.எங்கள் பல்கலையில் நடப்பு கல்வியாண்டு முதல், சமூகநீதி என்ற தலைப்பில் குறுகிய கால மற்றும் சான்றிதழ் படிப்பு அறிமுகம் செய்யப்படும். இதை படிக்க பயிற்சி கட்டணம் கிடையாது. 15 வயது நிரம்பிய யாரும் படிக்கலாம்.
- தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கோ.பார்த்தசாரதி


'பாடம் படிப்பதால் மட்டும் சமூக நீதி வந்து விடாது. மக்களின் மனதில் மாற்றம் வர வேண்டும்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கோ.பார்த்தசாரதி அறிக்கை.முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கை, நம் மறைந்த தலைவர் கருணாநிதி, தலையில் துாக்கி வைத்து கொண்டாடினார். எனவே, ஈ.வெ.ரா.,வை போல வி.பி.சிங்கையும் நாம் கொண்டாட வேண்டும்.
- தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி


latest tamil news
'பிறந்த நாள், நினைவு நாளில் மாலை அணிவிக்க வேண்டும்; பிறகு மறந்து விட வேண்டும் என மறைமுகமாக கூறுகிறீர்களோ...' என சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி பேச்சு.ஓடும் பாம்பை மிதிக்கும் இளைஞர் பட்டாளம், அ.தி.மு.க.,வில் உள்ள வரை இந்த இயக்கத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. ஆலமரம் போலிருக்கும் இந்த கட்சியை, விழுதுகள் போல இளைஞர்கள் தாங்கிப் பிடிக்க வேண்டும்.
- அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்


'இப்படித் தான் இன்னும் ஐந்தாண்டுகளுக்கு உங்கள் கட்சி இளைஞர்களை உசுப்பேற்ற வேண்டும்; இல்லையேல் உறங்கி விடுவர்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்ற ராஜஸ்தான் காங்கிரஸ் அரசின் சட்ட மசோதா நிறைவேறினால், குழந்தை திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடைத்து விடும். இது, குழந்தைகளுக்கு எதிரான காங்கிரசின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது.
- பெங்களூரு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா


'காங்கிரஸ் அரசுகள் என்ன செய்கின்றன என கண்ணில் எண்ணெய் விட்டு கவனித்துக் கொண்டிருப்பீர்கள் போலிருக்கிறதே...' என, கூறத் தோன்றும் வகையில், பெங்களூரு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
24-செப்-202102:41:29 IST Report Abuse
meenakshisundaram ஹிந்து மதத்தில் இவளை போன்ற ஜென்மங்கள் இருப்பதே நாட்டுக்கு கெடுதல்
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
22-செப்-202117:53:08 IST Report Abuse
S. Narayanan தமிழ் நாடு அரசே சமூக நீதியை கடைபிடிக்க வில்லை என்றால் படிப்பை அறிமுக படுத்துவதில் எந்த பயனும் இல்லை. இதெல்லாம் செலவு கணக்கு எழுதி மக்களை ஏமாற்றி ஊழல் செய்வதற்கு தான்.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
22-செப்-202116:37:06 IST Report Abuse
Suppan அந்த வி பி சிங் பிரதமராக இருந்தபொழுதுதான் காஷ்மீரிலிருந்து பண்டித்துக்கள் விரட்டி அடைக்கப்பட்டார்கள். அவருடைய உள்துறை அமைச்சராக இருந்த முஃதி முஹம்மது செய்யதுவின் ஆசியுடன் இந்த கொடூரமான செயல் நிகழ்ந்தது. வி பி சிங் வாய் மூடி மௌனியாக இருந்தார் என்பது வரலாறு. இந்தக் கேவலமான பிறவியைத் தலையில் தூக்கிக் கொண்டு கூத்தாட வேண்டுமாம். அம்மணி அந்த வேலையை நீங்களே செய்யுங்கள்.
Rate this:
Hari - Chennai,இந்தியா
22-செப்-202118:42:45 IST Report Abuse
Hariசார் ஹிந்து பண்டிட்களை அடித்து விரட்டியவர் என்பதால்தான் அவரை கொண்டாடவேண்டும் என்று சொல்கிறார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X