அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கூட்டணியில் குழப்பம்: காங்., - மா.கம்யூ., தனித்து போட்டி

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு, மாவட்ட அளவில் இடபங்கீடு தருவது குறித்த பேச்சில், சுமூக முடிவு எட்டப்படவில்லை. அதனால், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், தனித்து போட்டியிட முடிவு செய்து உள்ளன.தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களில், அக்., 6, 9ல், இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க
திமுக, கூட்டணி, குழப்பம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தனித்து போட்டி, Congress, DMK, திராவிட முன்னேற்றக் கழகம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு, மாவட்ட அளவில் இடபங்கீடு தருவது குறித்த பேச்சில், சுமூக முடிவு எட்டப்படவில்லை. அதனால், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், தனித்து போட்டியிட முடிவு செய்து உள்ளன.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களில், அக்., 6, 9ல், இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், கூட்டணி கட்சிகளுக்கு இடஒதுக்கீடு செய்வதில், ஆளுங்கட்சியான தி.மு.க., கூட்டணிக்குள், பல மாவட்டங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால், கம்யூனிஸ்ட், காங்., கட்சிகள் தனித்து போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தில், ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சியில், 12 வார்டுகளும் உள்ளன.

தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை, தி.மு.க., மாவட்ட செயலர் ஆவுடையப்பன் நேற்று வெளியிட்டார். அதில், கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கு, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. அவர்கள் கேட்ட இடங்களிலும், தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். காங்கிரசுக்கும் கேட்ட இடங்கள் ஒதுக்கப்படவில்லை. ஒரே ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனால், நாங்குநேரி, மானுார் உள்ளிட்ட பகுதிகளில், காங்கிரசார் தனித்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இடபங்கீட்டில் அதிருப்தி அடைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலர் பாஸ்கரன் கூறியதாவது: கூட்டணி பேச்சு முறையாக நடக்கவில்லை. நாங்கள் வழக்கமாக போட்டியிடும் அம்பாசமுத்திரம், ராமையன்பட்டி உள்ளிட்ட சில ஊராட்சி ஒன்றியவார்டுகளை கேட்டோம். எங்களிடம் பேச்சு நடத்தாமல் வேட்பாளர் பட்டியலை தி.மு.க., அறிவித்துள்ளது. எனவே, எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களில், வேட்பு மனுதாக்கல்செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
அதேநேரத்தில், தி.மு.க.,வில் 'சீட்' பெறுவதிலும், கட்சியில் உச்சக்கட்ட கோஷ்டி பூசல் அரங்கேறி உள்ளது.

இது குறித்து, மாவட்ட தி.மு.க., பிரமுகர் கூறியதாவது:ஒரே குடும்பத்தில் கணவன், மனைவி என இருவருக்கும், சீட் தரப்பட்டு உள்ளது. பாரம்பரியமாக கட்சியில் இருந்தவர்களை விட்டு விட்டு, அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களை, மாவட்ட ஊராட்சி தலைவராக்கும் முயற்சியும் நடக்கிறது. தகுதியான தி.மு.க., வேட்பாளர்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன், தி.மு.க., பிரமுகர்கள் பலரும் வேட்பு மனுதாக்கல் செய்து விட்டனர். இதனால், தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, போட்டி வேட்பாளர்கள் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


அ.தி.மு.க., மீது பா.ஜ., அதிருப்தி


ஊரக உள்ளாட்சி தேர்தலில், கேட்ட இடங்களை வழங்காமல், தாங்கள் ஒதுக்கும் இடங்களில் போட்டியிடும்படி வற்புறுத்துவதால், அ.தி.மு.க., மீது, பா.ஜ.,வினர் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் இடபங்கீடு தொடர்பாக, அ.தி.மு.க., மூத்த தலைவர்களுடன், பா.ஜ., சார்பில் மாநில பொதுச் செயலர் கரு.நாகராஜன், கராத்தே தியாகாராஜன் உள்ளிட்டோர் இடம் பெற்ற குழு பேச்சு நடத்தியது.அத்துடன், பா.ஜ., சார்பில், ஒன்பது மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் குழுவினரும், அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர். இதன்பின், பா.ஜ., போட்டியிடும் இடங்களை இறுதி செய்ய, நேற்று முன்தினம் பா.ஜ., நிர்வாகிகள், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் சென்று பேசினர். இரு தரப்பினரும் பேசிக் கொண்டிருந்த போதே, அ.தி.மு.க.,வின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியானது.


latest tamil news


பேச்சின் போது, பா.ஜ., கேட்ட இடங்களை ஒதுக்காமல், தாங்கள் கூறும் இடங்களில் போட்டியிடுமாறு, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியுள்ளனர். இது, பா.ஜ.,வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.அதேநேரம், பா.ஜ.,வுக்கு குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கி வைத்து விட்டே, அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து பேச போதிய அவகாசம் இல்லாததால், உள்ளூர் நிர்வாகிகளுடன் கலந்து பேசி, குறிப்பிட்ட இடங்களில் போட்டியிட, பா.ஜ., முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

-நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
22-செப்-202119:38:23 IST Report Abuse
Thirumurugan வாய் கிழிய பேசும் பாஜகவும் அதன் தலைமையும் உள்ளாட்சி தேர்தலில் ஆவது தனித்து நின்று வெற்றி பெற்று மக்கள் செல்வாக்கை பெற்ற கட்சி என்று நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து இன்னும் யார் தோளிலாவது ஏறி நின்று வெற்றி பெற்று விட்டோம் என்று உதார் விடக்கூடாது.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
22-செப்-202118:51:10 IST Report Abuse
Narayanan இந்த அக்கட்சிகள் எல்லோரும் சட்டமன்ற தேர்தலில் தனித்தனியாக நின்று அவரவர்களின் திறமையை காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் . தேர்தல் ஆணையம் அப்படி செய்து கட்சிகளின் பதிவை நீக்கிவிடவேண்டும் .
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
22-செப்-202114:32:26 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN பாஜக தனித்து போட்டியிடுவதே அதன் வளர்ச்சிக்கு நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X