பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் தொடர்ந்து 2வது நாளாக 26 ஆயிரம் பேருக்கு கோவிட்

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் தொடர்ந்து 2வது நாளாக தினசரி கோவிட் பாதிப்பு 26 ஆயிரமாக பதிவாகியுள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26,964 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 35 லட்சத்து, 31 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 34,167 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே, 27 லட்சத்து, 83
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கோவிட், கோவிட்வைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் தொடர்ந்து 2வது நாளாக தினசரி கோவிட் பாதிப்பு 26 ஆயிரமாக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26,964 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 35 லட்சத்து, 31 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 34,167 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே, 27 லட்சத்து, 83 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 3.01 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 383 பேர் பலியானதை அடுத்து, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,45,768 ஆனது.


latest tamil news


இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.77 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.33 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.90 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி

இந்தியாவில் இன்று (செப்டம்பர் 22) காலை 8 மணி நிலவரப்படி 82.65 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 75,57,529 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


latest tamil news




உலக பாதிப்பு


இன்று (செப்டம்பர் 22-ம் தேதி) காலை 10.00 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 23 கோடியே, 03 லட்சத்து, 19 ஆயிரத்து, 299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 லட்சத்து, 22 ஆயிரத்து, 782 பேர் பலியாகினர். 20 கோடியே, 70 லட்சத்து, 60 ஆயிரத்து, 329 பேர் மீண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vamanan Nair - சான் ஹோஸே , கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
22-செப்-202112:34:17 IST Report Abuse
Vamanan Nair ஒரு கண்ட்ரோல் இல்லாமல் எல்லாவற்றையும் திறந்து விடுங்கள். பலர் மாஸ்க் இல்லாமல் சுற்றுகிறார்கள். மாஸ்க் அணிந்தவர்கள் பயப்படவேண்டி இருக்கு.
Rate this:
Cancel
22-செப்-202110:47:25 IST Report Abuse
முரளி தடுப்பு ஊசி செலுத்த பட்டாலும் மருத்துவர்கள் உரைப்பது கூட்டம் இருக்கும் இடங்களில் போகாதீர்கள் என்பது தான் நான் பொது இடங்களில் மக்களை பார்க்கும் போது முக கவசம் பெரும்பாலோர் அணிவது இல்லை சில உணவகங்களில் சர்வர்களும் அணிவதில்லை மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்றால் அரசாங்கம் என்ன செய்யும்? மீண்டும் ஒரு lock down தேவை
Rate this:
mohan - chennai,இந்தியா
22-செப்-202112:14:05 IST Report Abuse
mohanஇப்படியே லாக் டோவ்ன் போட்டு மிச்சம் இருக்கின்றன ஜனங்களையும் ஒட்டுமொத்தமா மேல அனுப்ப ஐடியாவை முரளி சொள்ளுகிறாரோ ? என்ன கொடுமை சார் இது ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X