அரசியல் செய்தி

தமிழ்நாடு

விழுப்புரத்தில் அ.தி.மு.க.,வினருக்கு ஆர்வமில்லை: உள்ளாட்சி தேர்தலில் நழுவும் மூத்த அரசியல் பிரமுகர்கள்

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு, அ.தி.மு.க.,வில் உள்ள மூத்த அரசியல் பிரமுகர்கள் ஆர்வம் காட்டாதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 28, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 293, கிராம ஊராட்சி தலைவர் 688, கிராம ஊராட்சி வார்டு
உள்ளாட்சித்தேர்தல், போட்டி, அதிமுக, ஆர்வமில்லை, நழுவல், மூத்த அரசியல், பிரமுகர்கள், A.D.M.K, ADMK, Viluppuram, அ.தி.மு.க, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், விழுப்புரம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு, அ.தி.மு.க.,வில் உள்ள மூத்த அரசியல் பிரமுகர்கள் ஆர்வம் காட்டாதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 28, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 293, கிராம ஊராட்சி தலைவர் 688, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 5,088 என மொத்தம் 6,097 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, கடந்த 15ம் தேதி துவங்கிய வேட்புமனு தாக்கல் இன்று 22ம் தேதியுடன் முடிவடைகிறது.


latest tamil news




இதுவரை மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 61 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு 790 பேரும், கிராம ஊராட்சி தலைவருக்கு 2,947 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 11,154 பேர் என மொத்தம் 14,952 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், இன்றுடன் மனு தாக்கல் முடிவடையும் நிலையில், மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.,வில் உள்ள மூத்த அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டவில்லை.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, உள்ளாட்சியில் பதவி வகித்த ஏராளமானோர் தற்போது வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதற்கு மாறாக அ.தி.மு.க.,வில் புதுமுகங்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். தற்போது தி.மு.க., ஆளும்கட்சியாக உள்ளது. இதனால், அ.தி.மு.க.,வினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆர்வம் செலுத்தவில்லை என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.மேலும், தி.மு.க., ஆளும்கட்சியாக உள்ள நிலையில், அ.தி.மு.க., பல லட்சம் செலவு செய்து தேர்தல் போட்டியிட வேண்டுமா என கருதுகின்றது.

கடந்த சட்டசபை தேர்தலின்போது, விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க.,வினர், இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர். இதனால், உள்ளாட்சித் தேர்தலில் சாதகமாக ஓட்டுகள் கிடைக்குமா என்ற குழப்பத்தில் உள்ளனர். அதையும் மீறி, வெற்றி பெற்றாலும் ஒன்றிய, மாவட்ட அளவிலான முக்கிய பதவிகள் கிடைக்குமா என்ற கேள்வியும் அ.தி.மு.க.,வினர் மத்தியில் எழுந்துள்ளது.

இதேபோன்று, தங்கள் கவுன்சிலர் வார்டு பகுதிகளுக்கு ஒப்பந்த வேலைகள் அல்லது நிதி ஒதுக்குவார்களா எனவும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க., கூட்டணியில் தற்போது பா.ஜ., மட்டுமே உள்ளது. இதில், பா.ஜ.,விற்கு மாவட்ட வார்டு உறுப்பினர் 2 மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில், பா.ம.க., இணைவது குறித்து கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் பேச்சுவார்த்தையில் இழுபறியாகவே உள்ளது. இந்த கூட்டணி உறுதியானால், வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் அ.தி.மு.க.,வினர் மத்தியில் குழப்பம் ஏற்படும். இந்த காரணங்களால் உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் போட்டியிடாமல் அ.தி.மு.க.,வினர் நழுவுவது, மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவித்தபோது, அ.தி.மு.க., ஆளும்கட்சியாக இருந்தது. அப்போது, அ.தி.மு.க.,வினர் போட்டி, போட்டுக் கொண்டு விருப்ப மனு மற்றும் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajasekaran - neyveli,இந்தியா
22-செப்-202114:06:49 IST Report Abuse
rajasekaran நான் அங்கு விசாரித்ததில் இப்படி ஒன்றும் இல்லை என்று கூறினார்கள்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
22-செப்-202112:33:35 IST Report Abuse
A.George Alphonse எப்படி இருந்த என் கட்சி இப்படி ஆகிவிட்டதே என்று மெரினாவில் உறங்கும் எம். ஜி.ராமச்சந்திரனும்,ஜெயலலிதாவும் தனி தனியாக புலம்புவது EPS க்கும்,OPS க்கும்கேட்கவில்லையா? ஆனால் தமிழக மக்களுக்கு கேட்கிறது. தமிழகத்தில் காணாமல் போன கட்சிகளின் பட்டியலில் AIADMK வெகு சீக்கிரமே இடம் பிடிக்கும்.
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
22-செப்-202118:19:04 IST Report Abuse
vadiveluஉண்மை காங்கிரசை போல் ஒரேயடியாக காணாமல் போகாமல் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகலாம்....
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
22-செப்-202112:12:33 IST Report Abuse
Thiagarajan Kodandaraman பேசாம கட்சியை களைத்து விட்டு அண்ணாமலை தலைமை ஏற்று சென்றுவிடுங்கள் .. இங்கு இருப்பதால் ஒருபயனும் இல்லை ஏகப்பட்ட தலைமை ..சிக்கல்கள் மிரட்டலுக்கு எல்லாம் வந்து கொண்டே இருக்கும் ..அது ஒன்று தான் பிழைக்க வலி
Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
22-செப்-202114:55:15 IST Report Abuse
பாமரன்கோ தண்டம்.... இன்னிக்கு அண்ணாமலை தகவல் / மார்க்கெட்டிங் வராமல் ரொம்ப நொந்து போயிருக்கீங்க போல...??? ரொம்ப வலியோ...???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X