கனடா பொதுத்தேர்தல்: 17 இந்திய வம்சாவளியினர் வெற்றி

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
டொரன்டோ: கனடாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.வட அமெரிக்காவைச் சேர்ந்த கனடாவின் பிரதமராக 2015 முதல் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளார். இவர், தன் ஆட்சிக் காலம் முடிவடைய இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், முன்னதாகவே பொதுத் தேர்தலை நடத்தினார். தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் லிபரல்
Canada Poll, Indian Origin Leaders, Win, Harjit Sajjan, கனடா, பொதுத்தேர்தல், ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய வம்சாவளி, வெற்றி

டொரன்டோ: கனடாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

வட அமெரிக்காவைச் சேர்ந்த கனடாவின் பிரதமராக 2015 முதல் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளார். இவர், தன் ஆட்சிக் காலம் முடிவடைய இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், முன்னதாகவே பொதுத் தேர்தலை நடத்தினார். தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் லிபரல் கட்சிக்கு 156 இடங்கள் கிடைத்துள்ளன. காமன்ஸ் சபையில் பெரும்பான்மை பெற இன்னும் 14 இடங்கள் தேவை. எனினும் தற்போதைய கூட்டணியே தொடரும் என்பதால் லிபரல் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.


latest tamil news


இந்த பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தேசிய ஜனநாயக கட்சி தலைவர் ஜக்மீத் சிங், 40 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசில் இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஹர்ஜித் சாஜன், அனிதா ஆனந்த், பர்திஷ் சக்கர் ஆகிய மூன்று பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.


ஜஸ்டின் ட்ரூடோவிற்கு மோடி வாழ்த்து



கனடா பொதுத்தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டு உள்ளதாவது:தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் ஜன்டிஸ் ட்ரூடோவிற்கு வாழ்த்துகள். இந்தியா கனடா இடையிலான உறவை இன்னும் வலுப்படுத்தவும், சர்வதேச மற்றும் பல தரப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்



இவ்வாறு அந்த பதவில் மோடி தெரிவித்து உள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nachiar - toronto,கனடா
22-செப்-202118:20:06 IST Report Abuse
Nachiar இந்திய வம்சாவழி என்று மகிழ வேண்டாம். இதில் சிலர் காலிஸ்தானிகள். இன்னும் ஓரிருவர் சீன ஆதரவை பெற்றும் இருக்கலாம். யாழ்ப்பாணிகள் இந்தியாவை ஆதரிப்பது இல்லை. இந்தியாவை இந்தியர் தாம் காப்பாற்ற வேண்டும். ஜெய் ஹிந்
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
22-செப்-202117:38:42 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan காலிஸ்தான் தீவிரவாதிகள் கனடாவில் அதிகம். அதனால்தான் வெற்றி. இலங்கை தமிழர்களும் அந்த நாட்டு பிரிவினை வாதிகள். அவர்கள் வென்றால கனடாவிலும் தனி நாடு கேட்டு அங்குள்ள தமிழர்களை அழித்து விடுவார்கள்
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
22-செப்-202117:14:06 IST Report Abuse
DVRR 17 இந்திய வம்சாவளியினர்?? ஒருக்காலும் இல்லவே இல்லை? அவர்கள் கனடா பிரஜைகள் மட்டுமே அவர்கள் ஒருகாலத்தில் இருந்திருக்கலாம் அனால் இப்போது இல்லவே இல்லை. இது எப்படி இருக்கின்றதென்றால் நாம் ஒரு காலத்தில் குரங்குகளாக இருந்தோம் என்றால் அதற்க்காக நாம் குரங்கு வம்சம் என்று யாரும் சொல்லிக்கொள்வதில்லையே ஏன்??வெறும் மீடியாவில் மட்டும் தான் இந்திய வம்சாவளியினர் என்று டப்பா தட்டுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X