இந்திய - சீன எல்லையில் போர்ச்சூழல்: ராகுல்

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (45)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய எல்லைப் பகுதியில் போர்ச்சூழல் நிலவுவதாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு மே 5ம் தேதி, பாங்காங் ஏரிப் பகுதியில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க மத்திய அரசு கையாளும் நடவடிக்கைகளை ராகுல் தொடர்ந்து விமர்சித்து
India Facing, War Paradigm, Borders, Rahul, China, Infra Ramp Up, இந்தியா,  சீனா, எல்லை, போர்ச்சூழல், ராகுல், ராகுல் காந்தி, காங்கிரஸ்

புதுடில்லி: இந்திய எல்லைப் பகுதியில் போர்ச்சூழல் நிலவுவதாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே 5ம் தேதி, பாங்காங் ஏரிப் பகுதியில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க மத்திய அரசு கையாளும் நடவடிக்கைகளை ராகுல் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இரு தரப்பும் அப்பகுதியில் படைக்குவிப்பை படிப்படியாக அதிகரித்தன. ராணுவம் மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைக்குப் பின் கோக்ரா பகுதியில் இருந்து இரு தரப்பும் கடந்த மாதம் படைகளை வாபஸ் பெற்றன. தற்போது பிரச்னைக்குரிய பகுதியில் இரு நாடுகளும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்துள்ளன.


latest tamil news


இந்நிலையில், இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை சீனா மேம்படுத்தி வருவதாகவும், லடாக், உத்தரகண்ட், அருணாசல் ஆகியவற்றை ஒட்டிய சீன பகுதிகளில், 10 புதிய ராணுவத் தளங்களை சீனா அமைத்து வருவதாகவும், ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், 'நமது எல்லைப் பகுதிகளில் போர்ச்சூழலை நாம் சந்தித்து வருகிறோம்' எனப் பதிவிட்டு உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-செப்-202123:16:44 IST Report Abuse
பேசும் தமிழன் சீனா என்ன முடிவு எடுத்தாலும்... இவரிடம் கேட்டு தான் எடுக்கும் போல.... அந்த அளவுக்கு பப்பு அவர்களுக்கு சீனாவுடன் நெருக்கம்... இதை தான் இந்திய நாட்டு மக்களும் சொல்கிறார்கள்.... சீனாவிற்கு ஏதாவது கஷ்டம் என்றால் அது இவருக்கு வந்ததது போல்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
22-செப்-202120:04:45 IST Report Abuse
Vena Suna அதுக்கு என்ன பண்ணனும் என்கிற ? உங்க தாத்தா நேரு அப்படியே சும்மா உட்கார்ந்து இருந்தார் , அந்த மாதிரி சும்மா உட்கார சொல்றியாமோடி சும்மாவா இருப்பார்? நம்ம ராணுவமும் சும்மாவா இருக்கும் ? போய் வேலையை பாரு .
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
22-செப்-202117:32:32 IST Report Abuse
DVRR அக்கிரமம் அநியாயம் ஒரு கருத்து ஒரு கருத்து ஒரு கருத்து கூட பப்புவிற்கு ஆதரவாக இல்லையே அப்போ மூர்க்கன் பாவாடை இந்து எதிர்ப்பாளர்கள் யாரும் கருத்து எழுதவில்லையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X