அரசியல் செய்தி

தமிழ்நாடு

வைகோவின் 77வது பிறந்த நாள் முதல் முறையாக கொண்டாடிய வாரிசு

Added : செப் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவின் அரசியல் வாழ்க்கையில், முதல் முறையாக அவரது 77வது பிறந்த நாள் விழாவை, மகன் துரை கொண்டாடியுள்ளார்.இன்று வைகோவுக்கு 77வது பிறந்த நாள். அதை கொண்டாடுவதற்கு, அவர் முன்னுரிமை கொடுத்ததில்லை. வாரிசு அரசியலையும் வைகோ ஊக்குவித்ததில்லை. ஆனால், ம.தி.மு.க.,வினர் துரையை, அரசி யலுக்கு அழைத்து வந்துள்ளனர். வைகோவுக்கு இதய சிகிச்சை முடிந்த பின், அவர்
MDMK,Vaiko,ம.தி.மு.க,வைகோ



சென்னை : ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவின் அரசியல் வாழ்க்கையில், முதல் முறையாக அவரது 77வது பிறந்த நாள் விழாவை, மகன் துரை கொண்டாடியுள்ளார்.

இன்று வைகோவுக்கு 77வது பிறந்த நாள். அதை கொண்டாடுவதற்கு, அவர் முன்னுரிமை கொடுத்ததில்லை. வாரிசு அரசியலையும் வைகோ ஊக்குவித்ததில்லை. ஆனால், ம.தி.மு.க.,வினர் துரையை, அரசி யலுக்கு அழைத்து வந்துள்ளனர். வைகோவுக்கு இதய சிகிச்சை முடிந்த பின், அவர் சுற்றுப்பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. கட்சியினர் விருப்பத்தினால், அவர்களது இல்ல விழாவில், துரை பங்கேற்று வந்தார். சட்டசபை தேர்தலில் தென் மாவட்டங்களில் துரை பிரசாரம் செய்தார்.

இந்நிலையில், துரை வையாபுரி என்ற தன் பெயரை, துரை வைகோ என்று அவர் மாற்றியுள்ளார். உதயநிதிக்கு தி.மு.க., இளைஞரணி செயலர் பதவி வழங்கியது போல, துரைக்கும் இளைஞரணி செயலர் பதவி வழங்க வேண்டும் என, ம.தி.மு.க., வில், மாவட்ட செயலர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.அதேசமயம், வாரிசு அரசியலை எதிர்த்து ம.தி.மு.க., உருவானதால், வாரிசு அரசியலை ஊக்குவிக்கக் கூடாது என்று, சில மாவட்ட செயலர்கள், கட்சிக்குள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அண்ணாதுரை, ஈ.வெ.ராமசாமி, வைகோவின் பிறந்த நாட்களை, முப்பெரும் விழாவாக, வட சென்னை கிழக்கு மாவட்ட ம.தி.மு.க., சார்பில், சென்னையில் நேற்று கொண்டாடினர்.இந்த விழாவில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை துரை வைகோ வழங்கினார்.முப்பெரும் விழா அழைப்பிதழில், 'எங்களின் எதிர்கால நம்பிக்கை துரை வைகோ' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
செந்தில் திருப்பூர் வைகோவை திமுகவை விட்டு நீக்கியதை கண்டித்து தீக்குளித்து உயிர் தியாகம் செய்த சுமார் 20 அப்பாவி தொண்டர்களின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X