பொது செய்தி

இந்தியா

பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டம்: 12 போ் குழுவை அமைத்தது மத்திய கல்வி அமைச்சகம்

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 போ் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.கடந்த 2020-ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்வி கொள்கைக்கு, தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், புதிய கல்விக்
New Curriculum, Schools, Kasturirangan, Education Ministry, Panel, Develop, NEP2020, புதிய கல்வி கொள்கை, பள்ளி, பாடத்திட்டம், குழு, மத்திய கல்வி அமைச்சகம், கஸ்தூரி ரங்கன்

புதுடில்லி: பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 போ் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்வி கொள்கைக்கு, தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் மூலமாக, பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட வரைவுக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.


latest tamil news


குழந்தைப் பருவக்கல்வி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஆசிரியர் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக துணைவேந்தா் நஜ்மா அக்தா், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழக வேந்தா் ஜக்பீா் சிங் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

புதிய பாடத்திட்டங்களை வடிவமைக்கும்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு ஆலோசிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganesha - tamilnadu,இந்தியா
22-செப்-202119:31:10 IST Report Abuse
ganesha அட்றா சக்க அட்றா சக்க ................இனிமே நம்ப ஊடகங்களுக்கும், உ பி ஸ் க்கும் மோதியை எதிர்க்க புது டாபிக் கிடைச்சிடுது. குஷி தான் போங்க? அவங்க கருத்துக்களை சொல்றதுக்குள்ள இவங்க எதிர்க்க ஆரம்பிச்சுடுவாங்க. ம்ம்ம்ம்ம் இன்னிலேந்தே ஸ்டார்ட் மியூசிக்.
Rate this:
Cancel
Nachiar - toronto,கனடா
22-செப்-202118:44:59 IST Report Abuse
Nachiar அடித்தளம் foundation கெட்டியானால் கட்டிட்டம் நன்றாக இருக்கும். முதல் கோணினால் முற்றும் கோண்ணும் . பள்ளியில் பாடத்திட்டம் உண்மையின் தேசியத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பப் பட்டால் வருங்கால இந்திய வலமுடன் வாழும். வீட்டில் பெரியவர்களும் சிறப்பாக தாய்மாரும் மூத்த சகோதரிகளும் சீரியலை சினிமாவை விட்டு நல்ல முன்னோடியாக இருந்தால் நல்ல பிரஜைகளை இந்தியா விரைவில் காணும். ஜெய் ஹிந்
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் ஒரு "இந்து"வை தலைவராக போட்டாச்சு த்ருப்திதானே ரங்காச்சாரி? இனியெல்லாம் ராமாயணமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X