பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டம்: 12 போ் குழுவை அமைத்தது மத்திய கல்வி அமைச்சகம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டம்: 12 போ் குழுவை அமைத்தது மத்திய கல்வி அமைச்சகம்

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (12)
Share
புதுடில்லி: பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 போ் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.கடந்த 2020-ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்வி கொள்கைக்கு, தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், புதிய கல்விக்
New Curriculum, Schools, Kasturirangan, Education Ministry, Panel, Develop, NEP2020, புதிய கல்வி கொள்கை, பள்ளி, பாடத்திட்டம், குழு, மத்திய கல்வி அமைச்சகம், கஸ்தூரி ரங்கன்

புதுடில்லி: பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 போ் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்வி கொள்கைக்கு, தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் மூலமாக, பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட வரைவுக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.


latest tamil news


குழந்தைப் பருவக்கல்வி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஆசிரியர் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக துணைவேந்தா் நஜ்மா அக்தா், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழக வேந்தா் ஜக்பீா் சிங் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

புதிய பாடத்திட்டங்களை வடிவமைக்கும்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு ஆலோசிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X