புதுடில்லி : 'குவாட்' மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.22) அமெரிக்கா கிளம்பிச் சென்றார்.
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, 'குவாட்' அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் மாநாடு அமெரிக்காவில் வரும் செப்., 24ம் தேதி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, பிரதமர் மோடி இன்று டில்லியில் இருந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்டார்; 23ம் தேதி அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்களை சந்திக்கிறார்.
பின்னர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோரையும் மோடி சந்தித்து பேச உள்ளார். இதைத் தொடர்ந்து, 24ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் குவாட் மாநாட்டில் மோடி உரையாற்ற உள்ளார்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின், முதன் முறையாக இம்மாநாட்டில் அனைத்து தலைவர்களும் நேரில் சந்திக்க உள்ளனர்.இது தவிர ஜோ பைடனை மோடி தனியாகவும் சந்தித்து பேச உள்ளார். இதைத் தொடர்ந்து 24ம் தேதி மாலை, மோடி நியூயார்க் செல்கிறார். அங்கு, 25ம் தேதி ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் மோடி உரை நிகழ்த்த உள்ளார்.
அமெரிக்கா கிளம்பும் முன்னர் டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: அதிபர் பைடன் அழைப்பை ஏற்று, இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும் அமெரிக்கா செல்கிறேன். சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், இந்தியா அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பிற்கான திட்டங்களை ஆராயவும் துணை அதிபர் கமலா ஹாரீசை சந்திப்பதில் ஆர்வமாக உள்ளேன்.
At the invitation of @POTUS @JoeBiden, I am visiting USA to continue our dialogue, and exchange views on areas of mutual interest. Also looking forward to meet @VP @KamalaHarris to discuss global issues and explore ideas for cooperation between 🇮🇳🇺🇸.
— Narendra Modi (@narendramodi) September 22, 2021

அதிபர் பைடன், ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் சுகோவுடன் இணைந்து குவாட் மாநாட்டிலும் பங்கேற்க உள்ளேன். மார்ச் மாதம் நடந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பலன்களை ஆராய உள்ளோம். சர்வதேச பிரச்னைகளை மையப்படுத்தி ஐக்கிய நாடுகள் பொது சபையில் உரையாற்ற உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
Will also participate in the Quad with President @JoeBiden, PM @ScottMorrisonMP and PM @sugawitter. We will take stock of outcomes of Summit in March. I will also address UNGA focusing on the global challenges. https://t.co/FcuhlJbeSl
— Narendra Modi (@narendramodi) September 22, 2021
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE