சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான தேர்வு நீட்: கமல் விமர்சனம்

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (65) | |
Advertisement
சென்னை: நீட் தேர்வை சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் ஓர் உயிர்க்கொல்லித் தேர்வு என்பதை உரக்கச் சொல்கிறது நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை. நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில்
NEET, MNM, Kamalhaasan, Kamal, NEET_Exam, Against, Social Justice, நீட், தேர்வு, உயிர்க்கொல்லி, மநீம, மக்கள் நீதி மய்யம், சமத்துவம், சமூக நீதி, கமல்ஹாசன், கமல்

சென்னை: நீட் தேர்வை சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் ஓர் உயிர்க்கொல்லித் தேர்வு என்பதை உரக்கச் சொல்கிறது நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை. நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை, இந்த தேர்வின் தீவிளைவுகளைப் பட்டியலிடுகிறது. அதன்படி, கிராமப்புற ஏழை மாணவர்கள், தமிழ் வழியில் பயின்றோர் மருத்துவராகும் கனவை இத்தேர்வு சிதைக்கிறது.


latest tamil news


நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 14.44 சதவீதத்தில் இருந்து வெறும் 1.7 சதவீதமாக சரிந்துள்ளது. இது சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரான தேர்வு என்பதற்கு இந்த ஒரு புள்ளிவிவரமே போதுமானது. நீட் தேர்வுக்கு பிறகு எம்.பி.பி.எஸ் படிப்பில் சி.பி.எஸ்.இ மற்றும் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள்தான் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளனர். நீட் தேர்வில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களில் 90 சதவீதம் பேர் தனியார் கோச்சிங் சென்டர்களில் பயிற்சி பெற்றவர்கள். நீட் தேர்வின் பின்னால் இருப்பது வணிக நோக்கம்தான் என்பது, நான் ஆரம்பம் முதலே சொல்லிவரும் ஒன்று. இந்த புள்ளிவிவரங்கள் அதை உறுதி செய்கின்றன.


latest tamil news


நாட்டிலேயே சிறந்த மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டிருப்பது தமிழகம். இந்தத் தேர்வு நீடிக்குமானால் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு சிதையும். நீட் தேர்வு அறிமுகமான பிறகு, தமிழ் வழியில் மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது. உலகம் முழுக்க தாய்மொழிக் கல்வி ஊக்குவிக்கப்பட்டு வரும் சூழலில், நீட் தேர்வு தாய்மொழிக் கல்விக்கு எதிரான மனோநிலையை வளர்க்கிறது.


latest tamil news


நகர்ப்புறத்தில் பிறந்த பண வசதி படைத்தவர்கள் மட்டுமே மருத்துவராகும் வாய்ப்பினை உருவாக்கும் இந்த அறமற்ற உயிர்க்கொல்லித் தேர்வினை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியாவில் இருந்தே விரட்டியடிக்க வேண்டும். உண்மைகளை வெளிக்கொணர்ந்து சட்டப் போராட்டத்திற்கான வழிவகைகளையும் ஆராய்ந்து சொன்ன ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினருக்கு மக்கள் நீதி மய்யம் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இக்குழுவின் பரிந்துரைகளின்படி விரைவில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-செப்-202109:30:35 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் டுமீல் மக்கள் இவனையும், இவனது கட்சியையும் ஒதுக்கி வைத்திருப்பதே நல்லது
Rate this:
Cancel
23-செப்-202107:23:28 IST Report Abuse
ravi chandran இந்த நாட்டின் மிகப்பெரிய மனநோயாளி இந்த டுபாக்கூர்
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
23-செப்-202106:15:28 IST Report Abuse
Balaji இவர்கட்சியின் பொருளாளர் பதவி எனக்கு வேண்டும்.. எந்த கேள்வியும் கேட்காமல் எனக்கு அதை இவர் தரவேண்டும்.. தருவாரா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X