ஊரக உள்ளாட்சி தேர்தல்: பழனிசாமி நாளை பிரசாரம் துவக்கம்

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சி, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நாளை செப்., 23ம் தேதி பிரசாரம் துவக்குகிறார்.மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, வேலூரில் இருந்து
ஊரக உள்ளாட்சி தேர்தல், அதிமுக, பிரச்சாரம், நாளை துவக்கம், எடப்பாடி பழனிசாமி

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சி, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நாளை செப்., 23ம் தேதி பிரசாரம் துவக்குகிறார்.

மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, வேலூரில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூரும் தனி மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன.

இந்த ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல், அடுத்த மாதம் 6ம் தேதி முதற்கட்டமாகவும், 9ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.


latest tamil news


ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணி ஒரு அணியாகவும் அ.தி.மு.க., பா.ஜ., ஒரு அணியாகவும் போட்டியிடுகிறது. அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த பா.ம.க., தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது.

இந்நிலையில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க., இணை ஒருங்கணைப்பாளருமான பழனிசாமி நாளை (செப்.,23) வேலுார், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளார். செப்.,24ம் தேதி திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணி - புதுகை,இந்தியா
23-செப்-202106:44:48 IST Report Abuse
மணி மழைக்கு முளைச்சு தழைச்ச விஷகாளானை யாரும் தீண்டுவதில்லை அதனால் அது அப்படியே இருக்கும் கொஞ்ச நாட்களுக்கு, கதிரவனின் கன்பட்டவுடன் சிலநாட்களில் இருந்தஇடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.
Rate this:
Cancel
22-செப்-202122:23:31 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் இலவச செல்போன் தந்தீர்களா? ஆவின் பால் பாக்கெட் ரூ.25 என சொன்னீர்கள், கொடுத்தீர்களா? ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் கொடுப்போம் என சொன்னீர்கள், யாருக்காவது கொடுத்தீர்களா? குறைந்த விலையில் அவசியமான மளிகை பொருட்கள் கொடுக்கப்பட்டதா? அனைவருக்கும் அம்மா வங்கி அட்டை என்னவானது? கோ-ஆப்டெக்ஸ் துணிகள் வாங்க ரூ.500 கூப்பன் வழங்கப்பட்டதா?பண்ணை மகளிர் குழுக்களை அமைத்தீர்களா? அனைத்து பழங்களுக்கான சிறப்பு வணிக வளாகங்களை அமைத்தீர்களா? அனைத்து பொது இடங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றீர்கள். எங்காவது ஒரு இடம் காட்டுங்கள். டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன் அமைத்தீர்களா? பட்டு ஜவுளிப் பூங்காவை எங்காவது உருவாக்கினீர்களா? இப்படி பெரிய பட்டியலே இருக்கிறது.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
22-செப்-202118:41:09 IST Report Abuse
Dhurvesh நாளை தேர்தல் பிரச்சாரத்தில் , சேகர் ரெட்டி கொடுத்த 58 கோடி பற்றி விளக்குவார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X