பொது செய்தி

தமிழ்நாடு

'மேட் இன் தமிழ்நாடு' என்ற நிலை உருவாக வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (133)
Share
Advertisement
சென்னை: ஏற்றுமதி மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "உலகின் அனைத்து பகுதிகளிலும் ‛மேட் இன் தமிழ்நாடு' என்ற நிலை உருவாக வேண்டும்," என வலியுறுத்தியுள்ளார்.சென்னை கலைவாணர் அரங்கில் 'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு' எனும் ஏற்றுமதி மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஏற்றுமதி திறனை
Tamilnadu CM, Stalin, Made In Tamilnadu, Export, DMK, தமிழகம், முதல்வர், ஸ்டாலின், மேட் இன் தமிழ்நாடு, ஏற்றுமதி,

சென்னை: ஏற்றுமதி மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "உலகின் அனைத்து பகுதிகளிலும் ‛மேட் இன் தமிழ்நாடு' என்ற நிலை உருவாக வேண்டும்," என வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் 'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு' எனும் ஏற்றுமதி மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஏற்றுமதி திறனை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஏற்றுமதியில் இந்தியாவிலேயே சிறந்த 3வது மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. பஞ்சு மீதான ஒரு சதவீத சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அத்துறையில் புதிய முதலீடுகள் வரத்துவங்கியுள்ளன.


latest tamil news


ஏற்றுமதி துறை எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தினால் தான், கொரோனா பரவல் காலத்திலும் அனுமதி வழங்கினோம். உலக வர்த்தக சூழலுக்கு ஏற்ப மதிப்புக்கூட்டு பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். காஞ்சிபுரம், ஆரணி, சின்னாளப்பட்டி சேலைகள் உட்பட புவிசார் குறியீடுபெற்ற பொருட்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு உள்ளன. பொது, தனியார் நிறுவனங்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.


latest tamil news


மாவட்ட ஏற்றுமதி மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தலைமை செயலாளர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு அமைக்கப்படும். தமிழக தொழில்துறையில் உலகம் இருக்கும் வகையில் இலக்கு இருக்க வேண்டும். மின் சார்ந்த பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் மோட்டார் வாகனங்கள், தோல் உற்பத்தி பொருட்கள் அதிகம். ‛மேட் இன் இந்தியா' என்பதை போல ‛மேட் இன் தமிழ்நாடு' என்ற அடிப்படையில் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். உலகின் அனைத்து பகுதிகளிலும் ‛மேட் இன் தமிழ்நாடு' என்ற நிலை உருவாக வேண்டும். அதுவே தமிழக அரசின் லட்சியம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (133)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
23-செப்-202100:26:12 IST Report Abuse
R. Vidya Sagar சீக்கிரம் தாமிர உற்பத்தி துவங்க வாய்ப்பு உள்ளது
Rate this:
Cancel
22-செப்-202123:13:02 IST Report Abuse
பேசும் தமிழன் "Made in Tamilnadu".. ஆகா போகிற போக்கை பார்த்தால்... எடப்பாடி சொன்னது போல் MP தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வராமல்... அதற்க்கு முன்பே வந்து விடும் போல் தெரிகிறதே!!!!
Rate this:
Cancel
22-செப்-202122:59:25 IST Report Abuse
பேசும் தமிழன் தனி நாடு கோரிக்கையை... அறிஞர் அண்ணா அவர்களே கைவிட்டு விட்டார்.... நீங்கள் என்ன... இப்போது புதுசா... Made in Tamil Nadu.... Made in India... எ‌ன்று‌ தானே இருக்க முடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X