மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி; இந்தியாவின் முடிவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஜெனிவா: மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவுவெடுத்துள்ளதை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.இந்தியாவில் கோவிட் வைரஸ் பெருந்தொற்று பரவல் உச்சமடைந்த போது, வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு நிறுத்தியது. தற்போது, நாட்டில் தொற்று பரவல் குறைந்துள்ளது; தடுப்பூசி உற்பத்தி அதிகரித்துள்ளது. இதையடுத்து, 'உபரி தடுப்பூசிகளை மீண்டும்
COVID19, CovidVaccine, Indias Decision, Restart, Exports, WHO, Chief Scientist, Welcomes, Dr Soumya Swaminathan, கோவிட் தடுப்பூசி, தடுப்பூசி பற்றாக்குறை, தடுப்பூசி ஏற்றுமதி, இந்தியா, முடிவு, உலக சுகாதார அமைப்பு, வரவேற்பு, மருத்துவர், சவுமியா சுவாமிநாதன்

ஜெனிவா: மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவுவெடுத்துள்ளதை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.

இந்தியாவில் கோவிட் வைரஸ் பெருந்தொற்று பரவல் உச்சமடைந்த போது, வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு நிறுத்தியது. தற்போது, நாட்டில் தொற்று பரவல் குறைந்துள்ளது; தடுப்பூசி உற்பத்தி அதிகரித்துள்ளது. இதையடுத்து, 'உபரி தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா தெரிவித்திருந்தார்.


latest tamil news


இதுகுறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி, மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், 'இந்தியா மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய முன்வந்துள்ளதை உலக சுகாதார அமைப்பு வரவேற்கிறது. பல வல்லரசுகள் இரண்டுக்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகளை தங்கள் மக்களுக்கு செலுத்தியுள்ளன; பூஸ்டர் டோஸ்களையும் செலுத்தி வருகின்றன. ஆனால் பல ஏழை நாடுகள் தங்களது மக்களுக்கு ஒரு டோஸ் கூட செலுத்த முடியாமல் தவிக்கின்றன.இந்நிலையில் இந்தியாவின் இந்த முடிவு, உலகளாவிய தடுப்பூசி வழங்கலில் சமநிலையை அடைய உதவும்' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-செப்-202122:01:11 IST Report Abuse
அப்புசாமி மோடி பாவம். தன் சொந்தக் காசில் எல்லோருக்கும் தடுப்பூசி வாங்கிப் போட்டு காப்பாத்திட்டாரு. அவரை திட்டாதீங்க. சீனா, அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, சவூதி, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற எல்லா நாடுகளிலும் காசு வாங்கிட்டுதான் தடுப்பூசி போடறாங்க. உலகத்திலே யாரும் செய்யாத சாதனை இது. காதுல நாலு முழம் பூவை வாங்கி வெச்சிக்கிட்டு கேளுங்க.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
22-செப்-202116:27:25 IST Report Abuse
vnatarajan திரு மோடிஜி உலக நாடுகளை ஒரு குடும்பமாக நினைக்கிறார். இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகள் பொறாமையால் திரு மோடியை தூற்றினாலும் உலகில் உள்ள பல நாடுகள் அவரின் செயல்பாட்டினை போற்றுகின்றன.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
22-செப்-202113:10:30 IST Report Abuse
Ramesh Sargam உலக சுகாதார அமைப்பு பாராட்டு. ஆனால், இங்குள்ள ஒரு சில அரசியல் கட்சிகள் எப்பொழுதும் போல், மோடி அரசை, மோடி அரசின் இந்த நல்ல செயலை தரம்தாழ்த்தி விமர்சனம் செய்கின்றனர். கொரானா வைரசுக்கு தடுப்பூசி போட்டு சரிப்படுத்தலாம். ஆனால், இந்த எதிர்கட்சிகளை சரி செய்யவே முடியாது, மோடியால் கூட...
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
22-செப்-202113:42:50 IST Report Abuse
vadiveluமக்கள் தொகை 130 கோடிக்கும் மேலே.அதில் ஒரு இருபது கோடி மக்கள் மோடியை எதிர்ப்பது பெரிதல்ல.அவர்களின் லாபம் குறைந்து இருக்கும், மனம் பதவி போன குடைச்சலில் இருக்கும்.போகட்டும் விடுங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X