பத்மநாப சுவாமி கோவில் கணக்கு தணிக்கையில் அறக்கட்டளைக்கு விலக்கு இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: கேரள பத்மநாப சுவாமி கோவிலின், கடந்த 25 ஆண்டு கால கணக்குத் தணிக்கை விவகாரத்தில், ‛‛திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு விலக்களிக்க முடியாது,'' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலை நிர்வகிப்பது தொடர்பான பிரச்னை 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. 'மாநில அரசு இக்கோவிலை நிர்வகிக்க தனி அறக்கட்டளையை
SC Declines, Shree Padmanabha Swamy Temple, Trust's plea to Exempt it from Audit, பத்மநாப சுவாமி கோவில், கணக்கு தணிக்கை, உச்சநீதிமன்றம், திருவிதாங்கூர் அரச குடும்பம்,

புதுடில்லி: கேரள பத்மநாப சுவாமி கோவிலின், கடந்த 25 ஆண்டு கால கணக்குத் தணிக்கை விவகாரத்தில், ‛‛திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு விலக்களிக்க முடியாது,'' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலை நிர்வகிப்பது தொடர்பான பிரச்னை 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. 'மாநில அரசு இக்கோவிலை நிர்வகிக்க தனி அறக்கட்டளையை அமைக்கலாம்' என, கேரள உயர்நீதிமன்றம் கடந்த 2011ல் உத்தரவிட்டது. அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததோடு, 'கோவிலை நிர்வகிக்கும் உரிமை திருவிதாங்கூர் அரச குடும்பத்துக்கு உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் கோவிலுக்கான வரவு - செலவு விவரங்களைத் தணிக்கை செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.


latest tamil news


இந்நிலையில், கணக்குத் தணிக்கை விவகாரத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு விலக்களிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதன் மீதான விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் யு.யு.லலித், எஸ்.ரவீந்திர பட், பெலா எம்.திரிவேதி ஆகியோர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில், 'பத்மநாப சுவாமி கோவிலின், கடந்த 25 ஆண்டு கால கணக்குத் தணிக்கை விவகாரத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு விலக்களிக்க முடியாது. இன்னும் 3 மாதத்துக்குள் அல்லது எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக கணக்கு தணிக்கையை முடிக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
22-செப்-202120:41:07 IST Report Abuse
Subramaniyam Veeranathan இந்த தீர்ப்பு எல்லா மத அலையங்களுக்கும் பொருந்துமா இல்லை ஹிந்துக்கள் மட்டுமே ஏமாந்தவர்களா
Rate this:
Cancel
ஜெய்கிந்த்புரம் - Madurai,இந்தியா
22-செப்-202117:58:31 IST Report Abuse
ஜெய்கிந்த்புரம் வெச்சான் பாரு ஆப்பு.
Rate this:
23-செப்-202107:41:36 IST Report Abuse
Narayanan Kஜெய்ஹிந்து பாய் அங்க UPல மவுலான கலீம் சித்திக்குக்கு ஆப்பு வெச்சூட்டாங்க. அங்க போய் அழுவலாம்...
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
22-செப்-202116:00:38 IST Report Abuse
sundarsvpr இந்த தீர்ப்பை வைத்து நாட்டின் உச்ச நீதிமன்றம் பாரத நாட்டிலுள்ள எல்லா திருக்கோயில்கலின் வரவு செலவு நிலபுலன்கள் ஆபரணங்கள் தணிக்கைக்கு உட்படுத்த தீர்ப்பு வழங்கவேண்டும். திருக்கோயில் சொத்துகள் யார் பொறுப்பு என்பதே தெரியாமல் உள்ளது. அறங்காவலர்கள் இல்லாமையால் உண்மையான சொத்து விபரங்கள் மறைக்கப்படுவதாய் கருதவேண்டிய நிலையில் உள்ளோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X