அக்.,21க்குள் அனைத்து மாநில மொழிகளிலும் சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை: மத்திய அரசு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அக்.,21க்குள் அனைத்து மாநில மொழிகளிலும் சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை: மத்திய அரசு

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை: ‛‛வரும் அக்டோபர் 21ம் தேதிக்குள் அனைத்து மாநில மொழிகளிலும் சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை வெளியிடப்படும்,'' என, சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு வெளியிட்டது. ஏப்ரல் மாதம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு அறிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டது. அது
EIA, Draft, Regional Language, Environmental Report, Central Government, Information, Chennai, High Court, சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை, மாநில மொழிகள், மத்திய அரசு, சென்னை, உயர்நீதிமன்றம், ஐகோர்ட்

சென்னை: ‛‛வரும் அக்டோபர் 21ம் தேதிக்குள் அனைத்து மாநில மொழிகளிலும் சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை வெளியிடப்படும்,'' என, சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு வெளியிட்டது. ஏப்ரல் மாதம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு அறிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டது. அது தொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபனையை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டது. பிராந்திய மொழிகளில் அதன் மொழிபெயர்ப்பை வெளியிடாமல், வரைவு குறித்த கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது ஏற்புடையதல்ல எனக்கூறி வரைவு அறிக்கை மீதான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


latest tamil news


இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் இன்று (செப்.,22) விசாரணைக்கு வந்தது. அப்போது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை அனைத்து மொழிகளிலும் வரும் அக்டோபர் 21ம் தேதிக்குள் வெளியிடப்படும் எனத் தெரிவித்த மத்திய அரசு, அது தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் கோரியது. இதனையடுத்து பொதுமக்கள் கருத்து கேட்பை விரிவாக நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 8 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X