பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 5 பேர் பணியிட மாற்றம்

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் ஐந்து முக்கிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: கலை மற்றும் கலாச்சாரத்துறை கமிஷனராக இருந்த கலையரசி ஐ.ஏ.எஸ்., தற்போது அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத்துறைக்கான சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு துணை கலெக்டர்
TAMILNADU, IAS OFFICERS, TRANSFER, IAS, ORDER, தமிழகம், 5 ஐஏஎஸ், அதிகாரிகள், பணியிடமாற்றம், தலைமை செயலர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஐந்து முக்கிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: கலை மற்றும் கலாச்சாரத்துறை கமிஷனராக இருந்த கலையரசி ஐ.ஏ.எஸ்., தற்போது அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத்துறைக்கான சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு துணை கலெக்டர் ப்ரதிக் தயாள் ஐ.ஏ.எஸ்., அரசு நிதித்துறை இணைச் செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


latest tamil news


பிரதீப் குமார் ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு நீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் கூடுதல் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சிதம்பரம் துணை வட்டாட்சியராக இருந்த மதுபாலன் ஐ.ஏ.எஸ்., ஈரோடு மாவட்டத்தின் கூடுதல் கலெக்டராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் துணை கலெக்டராக இருந்த சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ்., சென்னை பெருநகர மாநகராட்சியின் வடக்கு மண்டல கூடுதல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' பிரிவின் சிறப்பு அலுவலராக இருக்கும் ஷில்பா பிரபாகர் ஐ.ஏ.எஸ்.,க்கு அரசு சிறப்பு திட்டச் செயலாக்கத்துறையின் இணை செயலாளர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-செப்-202111:56:40 IST Report Abuse
அப்புசாமி மாற்றம் ஒன்றே மாறாதது. கழக ஆட்சியில் அதிகாரிங்க மாற்றம் ஒன்றே மாறாதது. நடத்துங்க.
Rate this:
Cancel
23-செப்-202111:56:53 IST Report Abuse
அப்புசாமி மாற்றம் ஒன்றே மாறாதது. கழக ஆட்சியில் அதிகாரிங்க மாற்றம் ஒன்றே மாறாதது. நடத்துங்க.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-செப்-202108:28:35 IST Report Abuse
Lion Drsekar மக்கள் வரிப்பணத்தில் வாங்குகின்ற சம்பளத்துக்கு வேலை செய்தால் போதும், முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் பேசுவதை காதால் கேட்டதால் இந்த கருத்துப்பதிவு, வெள்ளம், மழை, பஞ்சம் எது வந்தாலும் குறைந்தது 25 ஆண்டுகளுக்கு கவலை இல்லை, மாத மாதம் சம்பளம் , ஊதிய உயர்வு வேறு என்ன வேண்டும்? கனத்த இதயத்துடன் இந்த பதிவு செய்கிறேன், அவர்களை சொல்லி குற்றமில்லை, தகுதிக்கும் திறமைக்கும்வேலையும் பாராட்டும் இல்லாமல் போனதால் இந்த வெறுப்பு, மன்னன் எவ்வழியோ அவ்வழியே மக்களும் , வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X