சேலம்: வரும் 2024-ல் லோக்சபா தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக எதிர்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
![]()
|
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளிடையே ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: வரும் 2024-ல் லோக்சபா தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது .
எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் எம்.எல்.ஏக்களின் எணணிக்கையும் அதிகரிக்கலாம். எந்த கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்தது என்பது குறித்து அரசிடம் தெளிவான பதில் இல்லை. நீட் தேர்வு விலக்குக்காக அ.திமுக. கொண்டு வந்த தீர்மானத்தையே தி.மு.க.,வும் கொண்டு வந்துள்ளது. அ.தி.மு.க., கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு சிறப்பான திட்டம் என்பதால் தி.மு.க.,வும் அதையே பின்பற்றுகிறது.
![]() |
2024-ல் சட்டபை தேர்தல்?
தலைநகர் புதுடில்லியில் ஆயிரம் எம்.பிக்கள் அமரும் வகையில் புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.அதே போல் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புஇருப்பதால் 2024-ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.