சித்து முதல்வர் ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் செய்வேன்: அமிரீந்தர்சிங் ஆவேசம்

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சண்டிகர்: சித்து முதல்வர் ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் செய்வேன் என பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமிரீந்தர்சிங் தெரிவித்துள்ளார்.பஞ்சாபில் காங்., கட்சியில் முன்னாள் முதல்வர் அமிரீந்தர்சிங், சித்து இடையே ஏற்பட்ட உள்கட்சி மோதலில் அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி
 "Will Pit Strong Candidate, Won't Let Navjot Sidhu Win": Amarinder Singh சித்து முதல்வர் ,தடுக்க  தியாகம் செய்வேன்: அமிரீந்தர்சிங் ஆவேசம்

சண்டிகர்: சித்து முதல்வர் ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் செய்வேன் என பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமிரீந்தர்சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் காங்., கட்சியில் முன்னாள் முதல்வர் அமிரீந்தர்சிங், சித்து இடையே ஏற்பட்ட உள்கட்சி மோதலில் அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். சண்டிகரில் கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.


latest tamil news



முதல்வர் மாற்றப்பட்ட போதிலும் அமிரீந்தர்சிங், சித்து இடையே மோதல் தொடர்கதையாகி வருகிறது.அமரீந்தர்சிங் இன்று (செப்.22) அளித்த பேட்டியில், பஞ்சாப்பிற்கு மிகவும் ஆபத்தானவர், சித்து, வரப்போகும் சட்டசபை தேர்தலில் சித்து முதல்வர் ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் நான் செய்வேன். சித்துவுக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r ravichandran - chennai,இந்தியா
23-செப்-202100:37:13 IST Report Abuse
r ravichandran சித்து பிஜேபி இல் அமைச்சர் பதவி கிடைக்காமல் இங்கு தாவியவர். இவர் 50 ஆண்டுகால காங்கிரஸ் கட்சி உறுப்பினர். தனி கட்சி ஆரம்பிக்க போவதாக தவல்கள் வருகின்றன. எப்படியும் இம்முறை வரும் தேர்தலில் காங்கிரஸ் பஞ்சாபில் மண்ணை கவ்வும்
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
22-செப்-202121:11:47 IST Report Abuse
Sivagiri அவ்வளவு தேசபற்று உள்ளவர்கள் காங்கிரசில் இருக்க கூடாதே . . துஷ்டனைக் கண்டால் தூர விலகு - என்ற பழமொழிக்கு ஏற்ப நடக்க வேண்டாமோ ,? போட்டிக்கு ஆளை அனுப்பியவுடன் புலம்ப கூடாது .
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
22-செப்-202122:09:15 IST Report Abuse
Dhurveshஉண்மை அவன் BJP sleeperCELL இங்கு வந்து கலகம் விளைவிக்க தான் மோடியால் அனுப்பப்பட்டவன் , ஆகவே உசார்...
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
22-செப்-202121:10:20 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN சித்து முதல்வர் ஆவதை திரு.அமிரீந்தர்சிங் தடுப்பார், இவர் ஆவதை அவர் தடுப்பார் ஆக மொத்தம் காங்கிரஸ் குட்டி சுவர் ஆவதை தடுக்க எந்த சக்தியாலும் தடுக்க முடியாது, ஆக இந்த நாட்டிற்கு நல்லது நடந்தால் சரி. வாழ்க பாரதம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X