கோவிட் வைரஸ்க்கு எதிரான ஒற்றை தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ள ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம், முதல் தடுப்பூசி போட்டு இரு மாதங்களுக்கு பின் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினால் வைரஸிற்கு எதிராக செயல்படுவதில் 94 சதவீதம் பலன் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.
![]()
|
கோவிட் வைரஸ் உருமாறியப்படி இருப்பதால் தடுப்பூசி ஏற்படுத்தும் நோய் எதிர்ப்புச் சக்தியை குறைக்கிறது. ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் பரவிய டெல்டா வகை வைரஸ் தடுப்பூசியின் செயல்திறனை கணிசமாக குறைத்தன. உலகளவிலும் டெல்டா வைரஸ், தொற்று ஏற்பட்டு அதன் மூலம் நோய் எதிர்ப்பாற்றல் உண்டானவர்களுக்கும், தடுப்பூசியால் நோய் எதிர்ப்பாற்றல் பெற்றவர்களுக்குமிடையே பரவி அதன் திறனைக் குறைத்தது. இதனால் 3ம் அலை ஏற்படாமலிருக்க பூஸ்டர் தடுப்பூசி குறித்த ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகள் இறங்கியுள்ளன. இருப்பினும் ஐ.நா., பூஸ்டர் தடுப்பூசியை தற்காலிகமாக நிறுத்தச் சொல்லியது. ஒரு தடுப்பூசி கூட போடாதவர்களுக்கு தடுப்பு மருந்து கிடைக்க வேண்டும் என்பதால் அதனை வலியுறுத்தியது.
இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த மாதம் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தை பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது. 65 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் பிற நோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பைசர் பூஸ்டர் தடுப்பூசிகளை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. ஜான்சன் மற்றும் ஜான்சன் தடுப்பூசியும் பூஸ்டர் தடுப்பூசிகளின் அனுமதிக்காக அது தொடர்பான ஆய்வு தரவுகளை செவ்வாயன்று வெளியிட்டிருக்கிறது. இத்தடுப்பூசியை அமெரிக்காவில் சுமார் 1.48 கோடி பேர் போட்டுள்ளனர்.
![]()
|
இது பற்றி அந்நிறுவனத்தின் தலைமை விஞ்ஞான அதிகாரி மருத்துவர் பால் ஸ்டோபெல்ஸ் கூறியதாவது: ஜான்சன் மற்றும் ஜான்சனின் பூஸ்டர் தடுப்பூசியை முதல் தடுப்பூசிக்கு 6 மாதங்களுக்கு பின் கொடுக்கும் போது கோவிட்டுக்கு எதிராக இன்னும் அதிக பாதுகாப்பைக் கொடுக்கும். பூஸ்டர் தடுப்பூசி போட்ட 4 வாரங்களில் 12 மடங்கு அதிக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. பக்கவிளைவுகளும் பெரிதாக இல்லை. வைரசுடன் போராடும் காலத்தை கணிசமாக அதிகப்படுத்தும். அதற்கான ஆதாரங்களை இப்போது உருவாக்கியுள்ளோம். என தெரிவித்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement