சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேம்பாலம் அருகில் கார் கவிழ்ந்து விபத்து நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் பலி; மற்றொரு வாலிபர் காயம்

Added : செப் 22, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர் புறவழிச்சாலை மேம்பாலம் அருகில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் உயிரிழந்தார்.சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, துலுக்கனுார் ஊராட்சி, பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த, அண்ணாமலை மகன் மணிகண்டன், 32. இவர், நெல் அறுவடை இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார்.இன்று, தனது நண்பர் லோகநாதன், 30, என்பவருடன், மணிகண்டன்,

ஆத்தூர்: ஆத்தூர் புறவழிச்சாலை மேம்பாலம் அருகில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, துலுக்கனுார் ஊராட்சி, பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த, அண்ணாமலை மகன் மணிகண்டன், 32. இவர், நெல் அறுவடை இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார்.இன்று, தனது நண்பர் லோகநாதன், 30, என்பவருடன், மணிகண்டன், செல்லியம்பாளையத்தில் உள்ள காஸ் பங்கிற்கு, 'ஓபல்' காரில் சென்றுவிட்டு, ஆத்துார் புறவழிச்சாலையில் வந்துள்ளார்.

அப்போது, உப்பு ஓடை பாலம் அருகில், கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மணிகண்டன், லோகநாதன் படுகாயமடைந்தனர். இவர்களை, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இதில், மணிகண்டன் உயிரிழந்தார். ஆத்துார் டவுன் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X