சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

செலவழித்தும் பயனில்லையே!

Added : செப் 22, 2021
Share
Advertisement
செலவழித்தும் பயனில்லையே!'மிகவும் சிரமப்பட்டு, பெரும் கூட்டத்தைக் கூட்டி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினாலும், ஒரே வார்த்தையில் நம்மை அவமதித்து விடுகின்றனரே' என, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் புலம்புகின்றனர். இங்கு, முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாட்டு வண்டி

அக்கம் பக்கம்


செலவழித்தும் பயனில்லையே!


'மிகவும் சிரமப்பட்டு, பெரும் கூட்டத்தைக் கூட்டி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினாலும், ஒரே வார்த்தையில் நம்மை அவமதித்து விடுகின்றனரே' என, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் புலம்புகின்றனர். இங்கு, முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாட்டு வண்டி பேரணிக்கு காங்., கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக ஏராளமான மாட்டு வண்டிகள், கிராமங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தன. சிவகுமார், சித்தராமையா உள்ளிட்ட காங்., தலைவர்கள் மாட்டு வண்டிகளில் அமர்ந்து, மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டபடி சென்றனர். 'நம் போராட்டம் பா.ஜ., அரசுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்' என, பேசியபடியே போராட்டம் முடிந்ததும் கலைந்து சென்றனர். பா.ஜ., தலைவர்களோ, 'போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மாட்டு வண்டிகளில் வந்தனர். அந்த மாடுகள் உயிருடன் இருப்பதற்கு காரணமே எங்கள் ஆட்சி தான். நாங்கள் தான் மாடுகள் வதை தடுப்பு சட்டத்தை அமல்படுத்தினோம். 'கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், இந்த மாடுகள் எல்லாம் இறைச்சிக் கடையில் தொங்கிக் கொண்டு இருந்திருக்கும்' என, கிண்டலடித்தனர். காங்கிரஸ் பிரமுகர்களோ, 'இவ்வளவு செலவழித்து, பெரிய கூட்டத்தைக் கூட்டி எல்லாமே வீணாகி விட்டதே' எனக் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X