சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

Added : செப் 22, 2021
Share
Advertisement
பூமியை காப்பாற்றுவோம்!குபே.பூபேஷ், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம். இது, அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது.தமிழகத்தில் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்க, 2019 ஜன., 1ம் தேதி முதல், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு

பூமியை காப்பாற்றுவோம்!குபே.பூபேஷ், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம். இது, அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது.தமிழகத்தில் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்க, 2019 ஜன., 1ம் தேதி முதல், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.மூன்று ஆண்டுகளாகியும், இரண்டு அரசுகளாலும் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் முழுமை பெற முடியவில்லை. குறிப்பாக சென்னையில் 10 சதவீதம் அளவில் கூட பிளாஸ்டிக் ஒழிக்கும் நடவடிக்கையில் வெற்றியில்லை. காரணம், மாநகராட்சியின் பொறுப்பற்ற செயல்பாடு தான்.அதிகாரிகள் எப்போதும் சில்லரை விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தி, அபராதம் விதித்து, தம் கடமையை நிறைவேற்றி விடுகின்றனர். இதனால் பிளாஸ்டிக் ஒழியவே ஒழியாது!பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் மொத்த விற்பனை நிறுவனங்களை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. அந்த இடங்களுக்கு, 'சீல்' வைத்தால், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கலாம்.மாநிலத்தில் லட்சக்கணக்கான சில்லரை கடைகள் உள்ளன. உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் 100 தான் இருக்கும். எதை மூடுவது எளிது?சில்லரை கடைக்காரர்களிடம் அதிரடி காட்டும் அதிகாரிகள், பெரு நிறுவனங்களைக் கண்டால் 'பம்மி' விடுகின்றனர்.பிளாஸ்டிக்கை 100 சதவீதம் ஒழிக்க வேண்டும் என்றால், அதை தயாரிக்கும் இடத்தை முடக்க வேண்டும்.'ஹெல்மெட், மாஸ்க்' அணியாதோர் மீது நடவடிக்கை எடுப்பதை போல, பிளாஸ்டிக் பை எடுத்து செல்லும் மக்களிடம் அபராதம் விதிக்கலாம். உயிர்வாழ, இருக்கும் ஒரே பூமியை காப்பாற்ற வேண்டுமானால், பிளாஸ்டிக் ஒழிப்பு மிக அவசியமானது.lll'110' விதி அவசியமா?ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டசபை விதிகள் இயற்றப்பட்டு உள்ளன; இதில் மொத்தம் 23 அத்தியாயங்களும், 292 விதிகளும் உள்ளன. அந்த விதிகளில் உட்பிரிவுகளும் உண்டு.இதில், '110' விதியின் கீழ், தமிழக அரசு எண்ணற்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.அந்த விதி தான் என்ன?முதல்வர் அல்லது அமைச்சர், பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தை பற்றி சபாநாயகரின் அனுமதியுடன், 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிக்கை ஒன்றை அளிக்கலாம்; அந்த அறிக்கையின் மீது எவ்வித விவாதமும் இருத்தல் கூடாது.அது ஏன் என்றால், முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் விவாதம் மேற்கொண்டால் கால விரயம் ஏற்படும் என்பதால் தான்.அதாவது, மிக அவசியமான விஷயத்திற்கு மட்டுமே 110 விதியை பயன்படுத்த வேண்டும்.நம் தமிழக சட்டசபையில் அப்படியா நடக்கிறது... எதற்கெடுத்தாலும் 110 விதியின் கீழ் அறிக்கை வெளியிடப்படுகிறது.கடந்த 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க., ஆட்சியில் 110 விதியின் கீழ், முதல்வர்களால் அறிவிக்கப்பட்ட 2.40 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 537 அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாம்.இத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்றால், 110 விதியை முறையாக பயன்படுத்தவில்லை என்று தானே அர்த்தம்?தொடர்ந்து ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க., அரசும், தற்போது நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரிலும் 110 விதியின் கீழ் பல்வேறு திட்ட அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. இந்த விதியின் கீழ் வெளியிடப்படும் திட்ட அறிவிப்புகள் பெரும்பாலும், தற்காலிகமாக பொதுமக்களை திருப்திபடுத்த மட்டுமே ஆட்சியாளர்களுக்கு பயன்படுகிறது.அதனால், முறையாக பயன்படுத்தப்படாத 110 விதியை நீக்கி விடலாம்.lll

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X