சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : செப் 22, 2021
Share
Advertisement
'ஏராளமான குழப்பங்களும், விடுதல்களும், நிராகரிப்புகளும் அந்த அறிக்கையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சாடுகின்றனவே...' என, சொல்லத் துாண்டும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி அறிக்கை: 'நீட்' தேர்வு தொடர்பான நீதியரசர் ஏ.கே.ராஜன் கமிட்டியின் அறிக்கை, 'நீட் தேர்வானது அரசு பள்ளி- ஏழை-, எளிய- கிராமப்புற மாணவர்கள் மருத்துவர் ஆவதைத் தடுக்கிறது' என்பதை புள்ளி

பேச்சு, பேட்டி, அறிக்கை

'ஏராளமான குழப்பங்களும், விடுதல்களும், நிராகரிப்புகளும் அந்த அறிக்கையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சாடுகின்றனவே...' என, சொல்லத் துாண்டும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி அறிக்கை: 'நீட்' தேர்வு தொடர்பான நீதியரசர் ஏ.கே.ராஜன் கமிட்டியின் அறிக்கை, 'நீட் தேர்வானது அரசு பள்ளி- ஏழை-, எளிய- கிராமப்புற மாணவர்கள் மருத்துவர் ஆவதைத் தடுக்கிறது' என்பதை புள்ளி விபரத்தோடு அம்பலப்படுத்தி, 'நீட் தேர்வை தடை செய்' எனும் ஒட்டுமொத்த தமிழகத்தின் எண்ணத்தைப் பிரதிபலித்துள்ளது.


'தற்கொலைகளுக்கு ஆதரவாக பேசினால் அதன் எண்ணிக்கை உயரும் என்பதை தாமதமாக தமிழக அரசு உணர்ந்திருக்கும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை
: 'நீட்' தேர்வுக்காக ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதால், முந்தைய அ.தி.மு.க., அரசை, அடிமை அரசு என தி.மு.க.,வினர் சொல்லினர். தி.மு.க., அரசு பதவியேற்று மூன்று மாதங்கள் தான் ஆகின்றன; மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


'உண்மையில் பாராட்டப்பட வேண்டிய முன்னேற்றம். நல்லவேளையாக பஞ்சாபில் மூளை சலவை கட்சிகள் இல்லை போலும்...' என, திருப்தி தெரிவிக்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை:
பஞ்சாப் மாநில முதல்வராக ஒரு துப்புரவு பணியாளர் பொறுப்பேற்று இருப்பது அரசியல் களத்தில் நிகழும் பண்பு மாற்றம். குறிப்பாக, அரசியல் கட்சிகளின் அக நிலையில் உருவாகி வரும் நெகிழ்வுப் போக்கு. கட்சிகளின் அதிகார அடுக்குகளில் நீடிக்கும் ஜாதி ஆதிக்கத்தில் ஏற்பட்டு வரும் தளர்வு நிலையாகும்.


'நீங்கள் என்ன சொன்னாலும், தி.மு.க., மேலிடம் உங்களை கண்டுகொள்ளவில்லை என்ற விரக்தி உங்கள் வார்த்தைகளில் தென்படுகிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை:
நம் செயலால் சம்பவங்கள் உருவாகுவது இல்லை. சம்பவங்கள் தான் நம்மை உருவாக்குகின்றன. எனவே யாரையும் நம்பத் தேவையில்லை.


'அதனால் மட்டுமல்ல, மோடி அரசு அறிமுகம் செய்யும் எதுவாக இருந்தாலும் எதிர்ப்பீர்கள். அந்த அளவுக்கு தான் காங்கிரஸ் கட்சி கட்டமைக்கப்பட்டுள்ளது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., பெண் எம்.பி., ஜோதிமணி அறிக்கை:
ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் போராடி படித்து மருத்துவராக கனவு காணும் மாணவர்களுக்கு 'நீட்' எவ்வளவு பெரிய அநீதி என்பதை ராஜன் கமிட்டி விவரிக்கிறது. அதனால் தான் நீட் எனும் அநீதியை எதிர்க்கிறோம்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X