பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : செப் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
செப்., 23, 1951புதுக்கோட்டையில் 1916 மே5ல் பிறந்தவர் பி.யு.சின்னப்பா; இயற்பெயர் சின்னசாமி. படிப்பில் ஆர்வம் இல்லாததால் டி.டி.சங்கரதாஸ் சுவாமிகளின், 'தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா' என்ற நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தார். பின், நாடகத்தில் இருந்து விலகி நன்னய்ய பாகவதர், சிதம்பர பாகவதர் போன்றோரிடம் இசை பயின்று கச்சேரிகள் செய்தார்.கடந்த 1936ல் வெளிவந்த சந்திரகாந்தா

இதே நாளில் அன்று


செப்., 23, 1951



புதுக்கோட்டையில் 1916 மே5ல் பிறந்தவர் பி.யு.சின்னப்பா; இயற்பெயர் சின்னசாமி. படிப்பில் ஆர்வம் இல்லாததால் டி.டி.சங்கரதாஸ் சுவாமிகளின், 'தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா' என்ற நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தார். பின், நாடகத்தில் இருந்து விலகி நன்னய்ய பாகவதர், சிதம்பர பாகவதர் போன்றோரிடம் இசை பயின்று கச்சேரிகள் செய்தார்.கடந்த 1936ல் வெளிவந்த சந்திரகாந்தா படம் வாயிலாக திரையுலகில் புகுந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். 1940ல் வெளியான உத்தமபுத்திரன் படத்தின் வாயிலாக, தமிழில் முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்தவர் என்ற பெருமை பெற்றார்.
மங்கையர்க்கரசி என்ற படத்தில் மூன்று வேடங்களில் நடித்தார். ஆர்யமாலா படத்தில் 10 வேடங்களில் நடித்தார். கண்ணகி, மனோன்மணி, ஜெகதலபிரதாபன் உட்பட மொத்தம் 26 படங்களில் நடித்தார். 1951 செப்., 23ல் தன் 35வது வயதில் இயற்கை எய்தினார்.பி.யு.சின்னப்பா, காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
27-செப்-202113:34:01 IST Report Abuse
Bhaskaran Puthu kottayil veedukalaaga vaangi kuvithaar .piragu kashtapattu iranthaar
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X