'மாஜி' முதல்வருக்கு எதிரான சத்தீஸ்கர் அரசின் மனு தள்ளுபடி

Added : செப் 22, 2021
Share
Advertisement
புதுடில்லி:பா.ஜ., மூத்த தலைவர்களான, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ரமண் சிங், சம்பித் பத்ரா மீதான புகாரை விசாரிக்க உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரும் சத்தீஸ்கர் அரசின் மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.விவசாய சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில் போராட்டம் நடந்து வருகிறது. சமூக வலைதளம்இது தொடர்பாக, பல வெளிநாட்டு பிரபலங்கள் சமூக வலை
 'மாஜி' முதல்வருக்கு எதிரான சத்தீஸ்கர் அரசின் மனு தள்ளுபடி

புதுடில்லி:பா.ஜ., மூத்த தலைவர்களான, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ரமண் சிங், சம்பித் பத்ரா மீதான புகாரை விசாரிக்க உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரும் சத்தீஸ்கர் அரசின் மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

விவசாய சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில் போராட்டம் நடந்து வருகிறது.


சமூக வலைதளம்

இது தொடர்பாக, பல வெளிநாட்டு பிரபலங்கள் சமூக வலை தளங்களில் கருத்துகளை பதிவு செய்தனர். அப்போது, 'டூல் கிட்' எனப்படும் தகவல் தொகுப்பையும் அவர்கள் இணைந்திருத்தனர்.இந்த டூல் கிட், காங்கிரஸ் ஆதரவுடன் பொய்யான தகவல்களுடன் உருவாக்கப்பட்டதாக, பா.ஜ., குற்றஞ்சாட்டியது.

இது தொடர்பாக, பல பா.ஜ., தலைவர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர்.அவ்வாறு பதிவிட்ட, பா.ஜ.,வைச் சேர்ந்த சத்தீஸ்கரின் முன்னாள் முதல்வர் ரமண் சிங், செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா மீது, சத்தீஸ்கர் போலீசார், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதற்கிடையே, ரமண் சிங் மற்றும் சம்பித் பத்ரா தாக்கல் செய்த மனுவை விசாரித்த, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், எப்.ஐ.ஆர்., மீது எந்த நடவடிக்கையும் எடுக்க இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், அரசியல் ரீதியில் மாநில அரசு வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டது.


மேல்முறையீடு

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, காங்.,கைச் சேர்ந்த முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, மனுவை தள்ளுபடி செய்தது. 'உயர் நீதிமன்றத்தின் விசாரணையில் தலையிட முடியாது' என, அமர்வு கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X