பத்மநாப சுவாமி கோவில் 'டிரஸ்ட்' கோரிக்கை நிராகரிப்பு

Added : செப் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:கேரளாவின் பத்மநாப சுவாமி கோவில் அறக்கட்டளையின் வரவு, செலவு கணக்கை தணிக்கை செய்வதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. வரவு, செலவுஇங்கு, உலகப் புகழ் பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. திருவிதாங்கூர் மன்னர் குடும்பம், பத்மநாப
 பத்மநாப சுவாமி கோவில் 'டிரஸ்ட்' கோரிக்கை நிராகரிப்பு

புதுடில்லி:கேரளாவின் பத்மநாப சுவாமி கோவில் அறக்கட்டளையின் வரவு, செலவு கணக்கை தணிக்கை செய்வதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.


வரவு, செலவு

இங்கு, உலகப் புகழ் பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. திருவிதாங்கூர் மன்னர் குடும்பம், பத்மநாப சுவாமி கோவில் அறக்கட்டளையின் கீழ் கோவிலை நிர்வகிக்கிறது. கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்றம் பத்மநாப சுவாமி கோவில் அறக்கட்டளையின் 25 ஆண்டு கால வரவு, செலவு கணக்கை தணிக்கை செய்ய உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, கோவில் அறக்கட்டளை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அறக்கட்டளையின் 25 ஆண்டு கால வரவு, செலவு கணக்கை தணிக்கை செய்வதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரப்பட்டிருந்தது. மேலும், அறக்கட்டளையின் செயல்பாடுகளை கோவில் நிர்வாகக் குழு மேற்பார்வையிடுவதில் இருந்தும் விலக்கு அளிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:கடந்த 2015ல் இவ்வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், கோவிலின் 25 ஆண்டு கால வரவு, செலவு கணக்கை தணிக்கை செய்ய வேண்டும் என, பரிந்துரைத்துள்ளார். இது, கோவிலுக்கு மட்டுமின்றி அறக்கட்டளை நிர்வாகத்திற்கும் பொருந்தும்.


அறிக்கை தாக்கல்

எனவே, கோவில் அறக்கட்டளையின் 25 ஆண்டு கால வரவு, செலவு கணக்கு தணிக்கையை மூன்று மாதங்களுக்குள் விரைந்து முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அறக்கட்டளை செயல்பாடுகளை, கோவில் நிர்வாகக் குழு மேற்பார்வையிடுவதில் இருந்து விலக்கு அளிக்கும் கோரிக்கையையும் ஏற்க முடியாது. இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
23-செப்-202110:03:10 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் ஏன் தணிக்கை ? ஏன் எதிர்ப்பு ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X