கவுரவமாக கருதுகிறேன்: கஸ்துாரி ரங்கன் நெகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கவுரவமாக கருதுகிறேன்: கஸ்துாரி ரங்கன் நெகிழ்ச்சி

Added : செப் 22, 2021
Share
பெங்களூரு:புதிய கல்விக் கொள்கை யின் கீழ், பாடத் திட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கஸ்துாரி ரங்கன், தனக்கு வழங்கப்பட்டுள்ள பணியை கவுரவமாக கருதுவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.ஒப்புதல்கடந்த 2020-ம் ஆண்டிற்கான புதிய கல்விக் கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29ம் தேதி ஒப்புதல் அளித்தது.இந்த புதிய கல்விக்
 கவுரவமாக கருதுகிறேன்: கஸ்துாரி ரங்கன் நெகிழ்ச்சி

பெங்களூரு:புதிய கல்விக் கொள்கை யின் கீழ், பாடத் திட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கஸ்துாரி ரங்கன், தனக்கு வழங்கப்பட்டுள்ள பணியை கவுரவமாக கருதுவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


ஒப்புதல்

கடந்த 2020-ம் ஆண்டிற்கான புதிய கல்விக் கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29ம் தேதி ஒப்புதல் அளித்தது.இந்த புதிய கல்விக் கொள்கையின்கீழ், பள்ளிக் கல்விக்கான புதிய பாடத் திட்டத்தை உருவாக்க, கஸ்துாரி ரங்கன் தலைமையில் 12 பேர் அடங்கிய வழிகாட்டுதல் குழுவை அமைத்து, மத்திய கல்வித் துறை அறிவித்தது.

இக்குழுவினர், குழந்தைப் பருவக் கல்வி, பள்ளிக் கல்வி, உயர்கல்வி மற்றும் ஆசிரியர் கல்விக்கான புதிய பாடத் திட்டத்தை வடிவமைக்க உள்ளனர். இக்குழுவில், ஜாமியா மில்லியா இஸ்லாமியபல்கலை துணைவேந்தர் நஜ்மா அக்தர், பஞ்சாப் மத்திய பல்கலை வேந்தர் ஜக்பீர் சிங், ஆந்திராவின் மத்திய பழங்குடியின பல்கலை வேந்தர் கட்டிமணி, ஜம்மு ஐ.ஐ.எம்., தலைவர் மிலிந்த் காம்ப்லே ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இந்நிலையில், குழுவுக்கு தலைமை தாங்கும் கஸ்துாரி ரங்கன் கூறியதாவது:மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள இந்த பணியை, மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இந்த குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும், கல்வி, பயிற்சி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நன்கு அறிந்தவர்களாக உள்ளனர்; அனைவரும் மிகவும் திறமையான கல்வியாளர்கள்.


காத்திருக்கிறேன்

அவர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளதை பாக்கியமாக கருதுகிறேன். அவர்களுடன் பணியாற்ற ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X