சில வரி செய்திகள்...: இந்தியா

Added : செப் 22, 2021
Share
Advertisement
ராணுவ வீரர் உடல்?ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டம் முகமதுபோரா பகுதியில், பாலித்தீன் பைக்குள் சிதைந்த நிலையில் கிடந்த ஒருவரின் உடலை போலீசார் கைப்பற்றினர். அது, கடந்த ஆண்டு ஆக., 2ல் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர் ஷாகிர் மஞ்சூர் வாகேயின் உடலாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதனை உறுதி செய்வதற்காக, மருத்துவ பரிசோதனைக்கு உடல் அனுப்பி
 சில வரி செய்திகள்...: இந்தியா

ராணுவ வீரர் உடல்?

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டம் முகமதுபோரா பகுதியில், பாலித்தீன் பைக்குள் சிதைந்த நிலையில் கிடந்த ஒருவரின் உடலை போலீசார் கைப்பற்றினர். அது, கடந்த ஆண்டு ஆக., 2ல் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர் ஷாகிர் மஞ்சூர் வாகேயின் உடலாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதனை உறுதி செய்வதற்காக, மருத்துவ பரிசோதனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

நடிகர் தருணிடம் விசாரணை

ஐதராபாத்: தெலுங்கானாவின் ஐதராபாதில் 2017ல் பதிவான போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில், தெலுங்கு திரைஉலகினருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக, பண மோசடி வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறையினர், திரைப்பட தயாரிப்பாளர் பூரி ஜெகநாத், நடிகையர் சார்மி கவுர், ரகுல் ப்ரீத் சிங், முமைத் கான், நடிகர்கள் நந்து, ராணா டகுபதி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். அடுத்ததாக, ஐதராபாதில் உள்ள அமலாக்கத் துறை இயக்குனர் அலுவலகத்தில் நடிகர் தருண் விசாரணைக்கு ஆஜரானார்.

கழுத்தில் டயருடன் நடனம்

தார்: மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில், காதலித்த 21 வயது வாலிபரும், 19 வயது பெண்ணும் சில மாதங்களுக்கு முன் ஊரை விட்டு ஓடினர். சமீபத்தில் திரும்பி வந்த அவர்களுக்கு தண்டனை அளிக்கும் வகையில், கழுத்தில் 'பைக்' டயருடன் நடனம் ஆடும்படி ஐந்து பேர் துன்புறுத்தி உள்ளனர். காதலருக்கு உதவிய 13 வயது சிறுமிக்கும் இதே தண்டனை வழங்கப்பட்டது. அவர்கள் டயருடன் நடனமாடும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது. வழக்கு பதிவு செய்த போலீசார், மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

பேச்சில் கவனம்: உமா பாரதி

போபால்: மத்திய பிரதேசத்தின் போபாலில், பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி, 'அரசு அதிகாரிகள் எங்கள் செருப்புகளை எடுப்பவர்கள்' எனக் கூறும் 'வீடியோ' சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் கண்டனம் தெரிவித்ததுடன், உமா பாரதி கவனமாகவும், கண்ணியமாகவும் பேச வேண்டும் என்றார். அவருக்கு உமா பாரதி எழுதியுள்ள கடிதத்தில் 'அதுபோல் பேசியதற்கு வருந்துகிறேன். இனிமேல் வார்த்தைகளை கவனமுடன் பயன்படுத்துவேன். அதேபோல், நீங்களும் முறையாக பேச வேண்டும்' எனக் கூறி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X