ஆபாச படம் வெளியிடுவதாக மிரட்டல்: கடிதத்தில் துறவி நரேந்திர கிரி தகவல்

Updated : செப் 24, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
லக்னோ:'பெண்களுடன் ஆபாசமாக இருப்பதாக திரிக்கப்பட்ட போலி படங்களை வெளியிடுவதாக மிரட்டினர்' என, துறவியர் அமைப்பான அகில பாரதிய அகாடா பரிஷத் தலைவர் நரேந்திர கிரி, மரணத்துக்கு முன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.முக்கிய சீடர்கள்உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு பிரயாக்ராஜில் உள்ள பாகம்பரி
ஆபாச படம் ,மிரட்டல்: கடிததம், துறவி நரேந்திர கிரி தகவல்

லக்னோ:'பெண்களுடன் ஆபாசமாக இருப்பதாக திரிக்கப்பட்ட போலி படங்களை வெளியிடுவதாக மிரட்டினர்' என, துறவியர் அமைப்பான அகில பாரதிய அகாடா பரிஷத் தலைவர் நரேந்திர கிரி, மரணத்துக்கு முன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


முக்கிய சீடர்கள்

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு பிரயாக்ராஜில் உள்ள பாகம்பரி மடத்தின் தலைவரான நரேந்திர கிரியின் உடல், அவரது அறையில் துாக்கில் தொங்கிய நிலையில் சமீபத்தில் மீட்கப்பட்டது.

அகில பாரதிய அகாடா பரிஷத் என்ற துறவியர் அமைப்பின் தலைவராகவும் உள்ள அவர், தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவருடைய உடல் அருகே அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் கிடைத்துள்ளது.தன் மறைவுக்குப் பின், மடத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது உட்பட பல விஷயங்களை அதில் அவர் கூறியுள்ளார்.இதைத் தவிர, பெண்களுடன் ஆபாசமாக இருப்பதாக திரிக்கப்பட்ட போலி படங்களை வெளியிடுவதாக மிரட்டப்பட்டதாகவும், அவமானப்படுவதைவிட மரணமே மேல் என முடிவெடுத்து உள்ளதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

தன் முக்கிய சீடர்களான ஆனந்த் கிரி, ஆத்ய திவாரி, சந்தீப் திவாரி ஆகியோரின் பெயர்களை அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைஅடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


பிரேத பரிசோதனை

இதற்கிடையே, மறைந்த நரேந்திர கிரியின் உடலை, ஐந்து டாக்டர்கள் குழு பிரேத பரிசோதனை செய்து, அறிக்கையை நேற்று தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கை, உயர் போலீஸ் அதிகாரியிடம் 'சீல்' வைக்கப்பட்ட உறையில் கொடுக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா
23-செப்-202120:10:42 IST Report Abuse
ரிஷிகேஷ் நம்பீசன் ஆசையே அனைத்துக்கும் காரணம் அதுவும் ருசி கண்ட ஆசை பாவம்
Rate this:
Cancel
R MANIVANNAN - chennai,இந்தியா
23-செப்-202116:25:44 IST Report Abuse
R MANIVANNAN துறவிகளுக்கு எதற்கு பணம் ?
Rate this:
jagan - Chennai,இலங்கை
23-செப்-202119:02:58 IST Report Abuse
jaganமடத்திற்கு வரும் காணிக்கை. துறவியின் சொந்த பணம் இல்லை....
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
23-செப்-202113:10:54 IST Report Abuse
Sivagiri சர்வதேச மதம் மாற்றும் சக்திகளின் பின்னணி இருக்கலாம் . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X