அரசியல் செய்தி

தமிழ்நாடு

டெங்கு பரவலை தடுக்க பன்னீர்செல்வம் கோரிக்கை

Added : செப் 22, 2021
Share
Advertisement
சென்னை:'டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க, அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஓரளவு கட்டுக்குள் இருக்கிற சூழலில், டெங்கு பாதிப்பு உருவெடுத்து உள்ளது. உருமாறிய டெங்கு நோய், மூளைக் காய்ச்சல் உட்பட பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்தை

சென்னை:'டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க, அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஓரளவு கட்டுக்குள் இருக்கிற சூழலில், டெங்கு பாதிப்பு உருவெடுத்து உள்ளது. உருமாறிய டெங்கு நோய், மூளைக் காய்ச்சல் உட்பட பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்தை உடையது.இந்த, 'டைப் 2' வகை டெங்கு பாதிப்பு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட 11 மாநிலங்களில் பரவி வருவதாக, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனவரி முதல் இன்று வரை, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,600ஐ கடந்து விட்டது. தினசரி 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை களை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X