சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் பலத்த மழை: விமான சேவைகள் பாதிப்பு

Added : செப் 22, 2021
Share
Advertisement
சென்னை:சென்னை புறநகர் பகுதிகளில் அதிகாலை பலத்த மழை பெய்ததால், சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கி, நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. இதனால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து, நேற்று அதிகாலை 2:20 மணிக்கு 147 பயணியருடன் சென்னை வந்த

சென்னை:சென்னை புறநகர் பகுதிகளில் அதிகாலை பலத்த மழை பெய்ததால், சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கி, நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. இதனால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து, நேற்று அதிகாலை 2:20 மணிக்கு 147 பயணியருடன் சென்னை வந்த விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

துபாயில் இருந்து 133 பயணியருடன் அதிகாலை 2:40 மணிக்கு வந்த எமிரேட்ஸ் விமானமும் பெங்களூருக்கு திரும்பிச் சென்றது.மேலும், அதிகாலை 3:10 மணிக்கு துபாயில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ்; 3:25 மணிக்கு கொழும்பில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆகியவை, சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன.

சென்னையில் இருந்து சிங்கப்பூர், துபாய், சார்ஜா, தோகா, குவைத், ஹாங்காங், கொழும்பு உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய ஒன்பது சர்வதேச விமானங்கள், மூன்று மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக புறப்பட்டு சென்றன.அதிகாலை 4:00 மணிக்கு மேல் மழை நின்றதும், பெங்களூரு சென்ற விமானங்கள் சென்னைக்கு திரும்பி வந்தன. இதனால் பயணியர் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X