அரசியல் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் பா.ஜ., தனித்துப் போட்டி ஏன்?

Added : செப் 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், ௮ மாவட்டங்களில் அ.தி.மு.க., ஒதுக்கிய இடங்களில் போட்டியிடும் பா.ஜ., கள்ளக்குறிச்சியில் மட்டும் தனித்துப் போட்டியிடுகிறது.இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது. கள்ளக்குறிச்சி தவிர்த்து, மற்ற எட்டு மாவட்டங்களில் பா.ஜ., கேட்ட இடங்களில் 75 சதவீதத்தை அ.தி.மு.க., ஒதுக்கியது. அந்த இடங்களில்

சென்னை:தமிழகத்தில், ௮ மாவட்டங்களில் அ.தி.மு.க., ஒதுக்கிய இடங்களில் போட்டியிடும் பா.ஜ., கள்ளக்குறிச்சியில் மட்டும் தனித்துப் போட்டியிடுகிறது.

இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது. கள்ளக்குறிச்சி தவிர்த்து, மற்ற எட்டு மாவட்டங்களில் பா.ஜ., கேட்ட இடங்களில் 75 சதவீதத்தை அ.தி.மு.க., ஒதுக்கியது. அந்த இடங்களில் போட்டியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கேட்ட எந்த இடங்களையும் ஒதுக்க, அம்மாவட்ட அ.தி.மு.க., பொறுப்பாளர்கள் முன்வரவில்லை. எனவே, கள்ளக்குறிச்சியில் பா.ஜ., விரும்பும் இடங்களில் தனித்துப் போட்டியிட வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பா.ஜ., கேட்கும் இடங்களை ஒதுக்கும் பட்சத்தில், அம்மாவட்டத்தில் அ.தி.மு.க.,வினர் போட்டியிடும் இடங்களில், வேட்பு மனு திரும்ப பெற பரிசீலிக்கப்படும். இல்லையெனில், வேட்புமனு தாக்கல் செய்துள்ள அனைத்து இடங்களிலும் பா.ஜ.,வினர் போட்டியிடுவர்.

கள்ளக்குறிச்சி தவிர்த்த எட்டு மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி பதவிகளில், 17 மாவட்ட கவுன்சிலர்; 125 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில், பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RandharGuy - Kolkatta,இந்தியா
23-செப்-202114:43:00 IST Report Abuse
RandharGuy தனியாக முட்டை போட என்ன சேர்த்துண்டு போட்டா என்ன
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
23-செப்-202112:58:48 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan தனியாக போட்டி இடுவது நல்லது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X